Romans 11:16 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிசையப்பட்ட மாவிலிருந்து முதற்பலனாகக் கொடுக்கப்படும் பகுதி பரிசுத்தமாய் இருக்குமாயின், மீதியான பிசைந்தமாவு முழுவதுமே பரிசுத்தமானதே; மரத்தின் வேர் பரிசுத்தமானதாய் இருந்தால், அதன் கிளைகளும் பரிசுத்தமானவைகளே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பிசைந்த மாவிலிருந்து எடுக்கப்பட்டு முதற்பலனாக அர்ப்பணிக்கப்பட்ட சிறிதளவு மாவானது பரிசுத்தமானது எனின் பிசைந்த மாவு முழுவதுமே பரிசுத்தமானதே. ஒரு மரத்தின் வேர் பரிசுத்தமானதெனின் அதன் கிளைகளும் பரிசுத்தமானவையே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
mealum mutha'rpalanaagiya maavaanathu parisuththamaayirunthaal, pisainthamaa muzhuvathum parisuththamaayirukkum; vearaanathu parisuththamaayirunthaal, ki'laiga'lum parisuththamaayirukkum.
Tamil OV
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒரு அப்பத்தின் முதல் துண்டு தேவனுக்குப் படைக்கப்படுமானால் மற்றக் முழுதும் புனிதமாகிவிடும். ஒரு மரத்தின் வேர்கள் புனிதமாய் இருந்தால் மற்ற கிளைகளும்கூட புனிதமாகிவிடும்.