Romans 11:3 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்” என்றான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலை செய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
Tamil Bible Romanised 2017
karththaavea, ummudaiya theerkkatharisiga'lai avarga'l kolaiseythu, ummudaiya balipeedangga'lai idiththuppoattaarga'l; naan oruvanmaaththiram meethiyaayirukki'rean, en piraa'nanaiyum vaanggaththeadugi'raarga'lea en'ru isravealarukku viroathamaay vi'n'nappampa'n'ninapoathu,
Tamil OV
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“கர்த்தரே! இந்த மக்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். உமது பலிபீடங்களை அழித்தனர். நான் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்னையும் கொன்று போட முயற்சி செய்கின்றனர்” என்றார் எலியா.