Romans 15:12 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இன்னும் ஏசாயா, “ஈசாயின் வேர் முளைத்தெழும்பும். ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று சொல்கிறான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மேலும் ஏசாயா, “ஈசாயின் வேரும் மக்களை ஆளுகை செய்கின்றவருமான ஒருவர் தோன்றுவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள்” என்று சொல்கின்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேலும், ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
Tamil Bible Romanised 2017
mealum, eesaayin vearum pu'rajaathiyaarai aa'lumpadikku ezhumbugi'ravarumaagiya oruvar thoan'ruvaar; avaridaththil pu'rajaathiyaar nambikkaivaippaarga'l en'ru easaayaa sollugi'raan.
Tamil OV
மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏசாயா இப்படி கூறுகிறார்: “ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார். யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார். அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.”