Romans 6:8 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதமாய், நாம் கிறிஸ்துவோடு மரித்தோமென்றால், நாம் அவருடனேகூட வாழ்வோமென்றும் விசுவாசிக்கிறோம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நாம் கிறிஸ்துவோடு மரணித்துப் போயிருந்தால், அவரோடு இணைந்து வாழ்வோம் என்றும் விசுவாசிக்கின்றோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal ki'risthuvudaneakooda naam mariththoamaanaal, avarudaneakoodap pizhaiththum iruppoam en'ru nambugi'roam.
Tamil OV
ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும்.