Romans 9:3 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் எனது சொந்த மக்களாகிய என்னுடைய யூத சகோதர சகோதரிகள் மீட்படைவதற்காக, முடியுமானால் நானே சபிக்கப்படவும் கிறிஸ்துவிலிருந்து விலக்கப்படவும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
என்னுடைய பிறப்பினாலே எனக்குச் சொந்த இனத்தவராகவும், என்னுடைய சொந்த சகோதர சகோதரிகளாகவும் இருக்கும் யூத மக்கள் காப்பாற்றப்படுவதானது, நான் கிறிஸ்துவைவிட்டு சபிக்கப்பட்டு ஒதுக்கப்படுவதால் நிறைவேற்றப்படுமானால், அதற்கும் நான் தயார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
Tamil Bible Romanised 2017
maamsaththinpadi en inaththaaraagiya en sagoathararukkup bathilaaga naanea ki'risthuvaivittuch sabikkappattavanaaga vea'ndumen'ru virumbuveanea.
Tamil OV
மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.