Song of Solomon 7:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது; அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
Tamil Bible Romanised 2017
un sirasu karmeal malaiyaippoalirukki'rathu; un thalaimayir iraththaambaramayamaayirukki'rathu; raajaa nadaikkaava'nangga'lil mayanggini'rki'raar.
Tamil OV
உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது. உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது. உன் நீண்ட அசையும் கூந்தலானது ராஜாவையும் சிறைபிடிக்கவல்லது.