Zephaniah 3:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, நீ செய்த உன் எல்லாச் செயல்களினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் தங்கள் பெருமையைக்குறித்து மகிழ்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த மலையில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன். அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும் நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள் அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, நீ செய்த உன் எல்லாச் செயல்களினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்து மகிழ்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த மலையில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
Tamil Bible Romanised 2017
enakku viroathamaayth thuroagampa'n'ni, nee seytha un ellaak kiriyaiga'linimiththamum annaa'lilea vedkappadaathiruppaay; appozhuthu naan un perumaiyaikku'riththuk ka'likoornthavarga'lai un naduvilirunthu vilakkividuvean; nee ini en parisuththa parvathaththil aganggaarangko'l'lamaattaay.
Tamil OV
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும், அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பிறகு, எருசலேமே, எனக்கு எதிராக உன் ஜனங்கள் செய்த தீயச் செயல்களுக்காக இனி நீ அவமானம் கொள்வதில்லை. ஏனென்றால், எருசலேமிலிருந்து தீய ஜனங்களை எல்லாம் அகற்றுவேன். நான் அந்த பெருமைக்கொள்கிற ஜனங்களை அழிப்பேன். என் பரிசுத்த பர்வதத்திலே தற்பெருமையுள்ள ஜனங்கள் இனி இருக்கமாட்டார்கள்.