bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
/
Numbers 27
Numbers 27
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 28 →
1
யோசேப்பின் மகனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் மகனாகிய மாகீரின் மகனான கிலெயாத்திற்குப் பிறந்த ஏபேருக்குப் மகனாயிருந்த செலோப்பியாத்தின் மகள்களாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
2
ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:
3
எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை.
4
எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
5
மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு போனான்.
6
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
7
செலோபியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்.
8
மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும்.
9
அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
10
அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
11
அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல் என்றார்.
12
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.
13
நீ அதைப் பார்த்தபின்பு, உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்;
14
சபையார் வாக்குவாதம்செய்த சீன் வனாந்திரத்தில் தண்ணீரின் காரியத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யவேண்டிய நீங்கள் என்னுடைய கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்திரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீரின் காரியமே.
15
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:
16
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி,
17
அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
18
கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற வாலிபனாகிய யோசுவா என்னும் நூனின் மகனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன்னுடைய கையை வைத்து,
19
அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
20
இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படி, உன்னுடைய அதிகாரத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.
21
அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
22
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடி யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,
23
அவன்மேல் தன்னுடைய கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 28 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36