bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
2 John 1
2 John 1
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
Jump to:
Chapter 1
1
மூப்பராகிய நான், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் எழுதுகின்றதாவது, சத்தியத்தின் பொருட்டு நான் உங்களில் அன்பாயிருக்கின்றேன். நான் மட்டுமல்ல, இறைவனின் சத்தியத்தை அறிந்த அனைவருமே உங்களில் அன்பாயிருக்கின்றார்கள்.
2
நம்மில் நிலைபெற்று, என்றென்றும் நம்மோடு நிலைத்திருக்கும் சத்தியத்தின் பொருட்டு:
3
பிதாவாகிய இறைவனிடமிருந்தும், பிதாவின் மகனாகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் வருகின்ற கிருபையும் இரக்கமும் சமாதானமும், நம் அனைவரோடும் சத்தியத்துடனும் அன்புடனும் இருப்பதாக.
4
பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்தியத்தின்படி நடப்பதைக் காண்பது எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.
5
இப்போதும் அன்பான அம்மையாரே! நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதாமல், நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நமக்கிருந்த கட்டளையையே எழுதுகிறேன்.
6
நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பாகும். நீங்கள் ஆரம்பத்திலிருந்து கேள்விப்பட்டிருக்கின்றபடி இந்த அன்பிலே நாம் நடக்க வேண்டும் என்பதே அவருடைய கட்டளையாகும்.
7
ஏனெனில் இயேசு கிறிஸ்து மனித உடலெடுத்து வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாத பல ஏமாற்றுக்காரர்கள் உலகமெங்கும் சென்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எவனும் ஏமாற்றுக்காரனாகவும் போலி கிறிஸ்துவுமாக இருக்கின்றான்.
8
ஆகவே உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் இழந்து போகாமல், அதற்கான வெகுமதியை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்படி விழிப்பாக இருங்கள்.
9
கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல், எல்லைமீறிச் செல்கின்ற எவனும் இறைவனை உடையவன் அல்ல. போதனையில் நிலைத்திருக்கின்றவனே பிதாவையும் மகனையும் உடையவனாயிருக்கிறான்.
10
உங்களிடம் வருகின்ற எவனாயினும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ வரவேற்கவோ வேண்டாம்.
11
ஏனெனில், அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்கின்ற எவனும், அவனுடைய தீய செயலுக்குப் பங்களிப்பு செய்கின்றான்.
12
உங்களுக்கு எழுத வேண்டிய விடயங்கள் அநேகம் உள்ளன. அதற்காக நான் மையையும் காகிதத்தையும் பயன்படுத்த விரும்பவில்லை. நான் உங்களை நேருக்கு நேராக சந்தித்து பேசவே விரும்புகிறேன். அப்போது நமது மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்.
13
தெரிவு செய்யப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும், தங்களுடைய வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
Jump to:
Chapter 1
All chapters:
1