bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
2 Timothy 3
2 Timothy 3
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
ஆனாலும் கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் வரவிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்.
2
ஏனென்றால், மக்கள் தங்களில் மாத்திரமே அன்பு காட்டுகின்றவர்களாகவும், பண ஆசை உள்ளவர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், பெருமை உள்ளவர்களாகவும், பழித்துப் பேசுகின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும்,
3
அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மை அற்றவர்களாகவும், அவதூறு பேசுகின்றவர்களாகவும், சுயகட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும்,
4
துரோகிகளாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும், இறைவனை நேசிக்காமல் சிற்றின்பங்களை விரும்புகின்றவர்களாகவும்,
5
தோற்றத்தில் இறைபக்தி உள்ளவர்களைப் போல் காட்டிக்கொண்டாலும் அதன் வல்லமையை மறுதலிக்கின்றவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகியிரு.
6
இப்படிப்பட்டவர்களே வீடுகளுக்குள் நுழைந்து மனவுறுதியில் பலவீனமான பெண்களைத் தம் வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்கள் பாவங்களால் நிறைந்தவர்களும், பலவித தகாத ஆசைகளினால் அலைக்கழிக்கப் படுகின்றவர்களுமாய் இருக்கின்றார்கள்.
7
இவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தைத் திருத்தமாக அறிந்துகொள்ள இயலாதவர்கள்.
8
யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்து நின்றது போல, இந்த மனிதர்களும் சத்தியத்தை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தவரையில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.
9
ஆனாலும் இவர்களால் இப்படி அதிக தூரம் போக முடியாது. ஏனெனில் அந்த இருவருக்கும் நடந்தது போல, இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும்.
10
ஆனால் நீயோ எனது போதனைகளையும், நடத்தையையும், வாழ்வின் நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத் தன்மையையும் அறிந்திருக்கிறாய்.
11
அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும் பாடுகளையும், அதை நான் எப்படிச் சகித்தேன் என்பதையும் அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னை விடுவித்தார்.
12
உண்மையில், கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்டவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகின்ற அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள்.
13
அதேவேளை தீய மனிதர்களும் வஞ்சகர்களும் மென்மேலும் கேடான நிலையடைவார்கள். அவர்கள் ஏமாற்றுகின்றவர்களாகவும், ஏமாற்றப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
14
நீயோ கற்று, உறுதியாக நம்புகின்றவைகளைத் தொடர்ந்து கடைப்பிடி. ஏனெனில் நீ யாரிடமிருந்து அவற்றைக் கற்றுக்கொண்டாய் என்பதையும் அறிவாய்,
15
எப்படி, உன் குழந்தைப் பருவத்திலிருந்தே பரிசுத்த வேதவசனங்களை நீ அறிந்து வைத்திருக்கின்றாய் என்பதுவும் உனக்குத் தெரியும். அவை கிறிஸ்து இயேசுவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கு உன்னை ஞானமுள்ளவனாக்குகிறது.
16
வேதவசனங்கள் அனைத்தும் இறைவனின் உயிர் மூச்சினால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக் கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், தவறை திருத்துவதற்கும், நீதியாய் வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளவையாய் இருக்கின்றன.
17
அதனூடாக, இறைவனுடைய ஊழியன் எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்வதற்கு முழுமையான ஆயத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றான்.
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4
Recommended Reading
Commentary
2 Timothy Commentaries
→
Devotional
2 Timothy Devotional Guide
→
Get This Bible
TRV Study Bible
→