bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Hebrews 2
Hebrews 2
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
1
எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப் போகாமல் இருப்போம்.
2
இறைதூதர்கள் மூலமாய் பேசப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டபடியால் அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் ஒவ்வொரு முறையும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது.
3
அப்படியானால், கிறிஸ்துவின் ஊடாக வருகின்ற இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்ப முடியும்? இந்த இரட்சிப்போ ஆண்டவர் இயேசுவினாலேயே முதலாவதாக அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
4
இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய விருப்பத்தின்படியே பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்து கொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.
5
வரப்போகும் உலகத்தைக் குறித்து நாம் பேசுகின்றோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
6
வேதவசனத்தில் ஓரிடத்தில் இதைப்பற்றி இவ்வாறு உறுதியாக சாட்சி சொல்லப்பட்டுள்ளது: “இறைவனே! மனிதனில் நீர் கரிசனைகொள்வதற்கு அவன் யார்? மனுமகனில் நீர் அக்கறைகொள்வதற்கு அவர் எம்மாத்திரம்?
7
நீர் அவரை சில காலம் இறைதூதர்களைவிட தாழ்ந்தவர் ஆக்கினீர். அவரை மகிமையினாலும் மாண்பினாலும் முடிசூட்டினீர்.
8
எல்லாவற்றையும் அவர் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” என்கிறார். இறைவன் எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, இறைவன் அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவருக்கு இப்பொழுதே கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
9
மரணத்தைத் தழுவியதால் இப்போது மகிமையினாலும் மாண்பினாலும் முடிசூட்டப்பட்டுள்ள இயேசுவையே இதில் நாம் காண்கின்றோம். அவரே சிறிது காலம் இறைதூதர்களிலும் சற்று சிறியவராக்கப்பட்டவர். இறைவனுடைய கிருபையினாலே அவர் எல்லோருக்காகவும் மரணத்தை அனுபவிக்கும்படியாகவே இப்படி நடந்தது.
10
இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. எனவே, அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவருவதற்காக, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை வேதனை அனுபவிக்கச் செய்து, அதன்மூலமாக முழு நிறைவுள்ளவர் ஆக்கியது இறைவனுக்கேற்ற செயலே.
11
பரிசுத்தமாக்குகின்ற அவரும், பரிசுத்தமாக்கப்படுகின்றவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கம்கொள்ளவில்லை.
12
இயேசு அவர்களைக் குறித்து, “நான் உம்முடைய பெயரை எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன், திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்” என்கிறார்.
13
மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும், “இதோ நான் இருக்கின்றேன். இறைவன் எனக்குக் கொடுத்திருக்கின்ற பிள்ளைகளும் என்னுடன் இருக்கின்றார்கள்” என்றும் கூறியுள்ளார்.
14
பிள்ளைகள் இரத்தமும் சரீரமும் உடையவர்களாய் இருக்கின்றபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்கு கொண்டார். அவருடைய மரணத்தினால் மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்த பிசாசை அழிப்பதற்கும்,
15
தங்களுடைய வாழ்நாள் எல்லாம் மரணத்தைக் குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்வதற்காகவும் அவர் மனித இயல்பில் பங்கு கொண்டார்.
16
இயேசு உதவி செய்வது நிச்சயமாக இறைதூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே.
17
இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப் போலாக வேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில் அவர் இரக்கமும் உண்மையுள்ளவருமான தலைமை மதகுரு ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவர்த்தியைச் செய்வதற்காகவுமே, தம்முடைய சகோதரர்களைப் போலானார்.
18
இயேசு சோதனைக்குட்பட்டபோது வேதனைகளை அனுபவித்தபடியால், இப்போது சோதிக்கப்படுகின்றவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13