bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
James 2
James 2
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
1
பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கின்ற நீங்கள், பக்கச்சார்புள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டாம்.
2
உங்கள் திருச்சபையில், ஒருவன் தங்க மோதிரமும் பளபளப்பான உடை அணிந்தும், ஏழையான ஒருவன் கந்தல் உடையுடனும் வந்திருக்கும்போது,
3
நீங்கள் பளபளப்பான உடை அணிந்து வந்த மனிதனைப் பார்த்து, “நீங்கள் நல்ல இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்” என்றும், அந்த ஏழையைப் பார்த்து, “நீ அங்கே நில்” அல்லது “எனது காலடியில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,
4
நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு உள்ளவர்களாக தீய எண்ணத்துடன் மதிப்பிடுகின்றவர்கள் அல்லவா?
5
எனக்குப் பிரியமானவர்களே, கேளுங்கள். உலகத்தில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை இறைவன் விசுவாசத்தில் செல்வந்தர்களாகவும், அவரில் அன்பாயிருக்கின்றவர்களுக்கு வாக்குறுதியளித்தபடி இறையரசை சொத்துரிமையாகப் பெறுபவர்களாகவும் தெரிவு செய்யவில்லையா?
6
ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்கிறார்கள்?
7
அவர்கள் அல்லவா உங்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனின் சிறப்பான பெயரை நிந்திக்கிறார்கள்?
8
“உன்னில் அன்பாயிருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாயிரு” என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற இந்த இறையரசின் சட்டத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்கின்றவர்களாய் இருப்பீர்கள்.
9
ஆனால் நீங்கள் பக்கச்சார்புள்ளவர்களாய் நடந்தால், பாவம் செய்து சட்டத்தை மீறியவர்கள் என்று நீதிச்சட்டத்தினால் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படுவீர்கள்.
10
ஏனெனில், யாராவது ஒருவன் நீதிச்சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால் அவன் முழுச் சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான்.
11
“தகாத உறவுகொள்ளாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கின்றார். எனவே நீ தகாத உறவில் ஈடுபடாவிட்டாலும், கொலை செய்தால், நீ நீதிச்சட்டத்தை மீறியவன் ஆகின்றாய்.
12
விடுதலையின் சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் நியாயம் தீர்க்கப்படப் போகின்றபடியால் பேச்சிலும், செயலிலும் கவனமாயிருங்கள்.
13
ஏனெனில் இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பே கிடைக்கும். நியாயத்தீர்ப்பிற்கு மேலாக இரக்கமே வெற்றி பெறும்.
14
பிரியமானவர்களே! ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டு என்று சொல்வதோடு, அதற்கேற்ற நன்னடத்தையை கொண்டிராவிட்டால் அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
15
ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும், அன்றாட உணவின்றியும் இருக்கும்போது,
16
உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய் வா. குளிர் காய்ந்துகொள், திருப்தியாக உணவருந்து” என்று சொல்லியும், அவரது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாமல்விட்டால், அதனால் பயன் என்ன?
17
இவ்விதமாய் விசுவாசம் நற்செயலுடன் சேர்ந்து இருக்காவிடின், அது மரணித்த விசுவாசமாகவே இருக்கும்.
18
ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கின்றது, என்னிடமோ, நற்செயல்கள் இருக்கின்றன” என்று சொல்வானாகில், அதற்கு நான், “நற்செயல் இல்லாத உன் விசுவாசத்தை எனக்கு காண்பி” என்றும், “நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய நற்செயல்களின் மூலமாய் உனக்குக் காண்பிப்பேன்” என்றும் சொல்வேன்.
19
ஒரே ஒரு இறைவன்தான் இருக்கின்றார் என்று நீ விசுவாசிக்கின்றாய். அது நல்லதுதான். பிசாசுகளும்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே.
20
மடைமையான மனிதனே! செயலற்ற விசுவாசம் பயனற்றது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ?
21
நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின் மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டார்?
22
ஆபிரகாமினுடைய விசுவாசமும், அவருடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவர் செய்த செயலினாலேயே அவருடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது.
23
இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தார். அந்த விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று சொல்கின்றபடி வேதவசனம் நிறைவேறிற்று. அவர் இறைவனின் நண்பன் என அழைக்கப்பட்டார்.
24
எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மட்டுமன்றி அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று காண்கின்றீர்கள்.
25
அவ்வாறே, ராகாப் எனப்பட்ட விலைமாது, இஸ்ரயேலரின் ஒற்றர்களை ஏற்றுக்கொண்டு, வேறு வழியாய் அவர்களை அனுப்பி வைத்த செயலினால், நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா?
26
உயிரற்ற உடலானது மரணித்துப் போன ஒன்று, அதைப்போலவே செயலற்ற விசுவாசமும் மரணித்த ஒன்றாக இருக்கின்றது.
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5