bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Luke 1
Luke 1
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 2 →
1
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விபரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் பெருமுயற்சி செய்தார்கள்.
2
தொடக்கத்தில் இருந்தே கண் கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்தவர்கள் எங்களுக்குக் கையளித்தபடியே எழுதினார்கள்.
3
நடந்த எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து நான் கவனமாய் விசாரித்தறிந்ததால், உமக்கு அவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு நானும் தீர்மானித்தேன்.
4
இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயமாக நம்பத்தகுந்த உண்மைகள் என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
5
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு மதகுரு இருந்தார். இவர் அபியாவின் மதகுரு பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி எலிசபெத்தும், மதகுருவான ஆரோனின் வழித்தோன்றலாயிருந்தாள்.
6
அவர்கள் இருவரும் மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டு, இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள்.
7
ஆனாலும் எலிசபெத் கருத்தரிக்க முடியாதவளாக இருந்ததனால், அவர்களுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை; அவர்கள் இருவரும், வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
8
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் கடமை புரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக மதகுருவின் பணிகளைச் செய்தார்.
9
ஒரு நாள் மதகுருவினருக்குரிய வழக்கத்தின்படி மதக் கடமைகளைச் செய்வதற்கு யாரைத் தெரிவு செய்வதெனச் சீட்டுப் போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்று தூபம் காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டார்.
10
தூபம் காட்டும் வேளை வந்தபோது, வழிபாட்டிற்கு ஒன்றுகூடி வந்த பெருந்தொகையான மக்கள், வெளியே மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.
11
அப்போது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
12
அப்போது சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டார், பெரும் பீதி அவரை பற்றிக்கொண்டது.
13
அந்தத் தூதனோ அவரைப் பார்த்து: “சகரியாவே பயப்படாதீர்! உமது மன்றாடல் கேட்கப்பட்டது. உமது மனைவி எலிசபெத் உமக்கு ஒரு மகனைப் பெறுவாள். நீர் அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
14
அவன் உமக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்பும் தருவான். அவனுடைய பிறப்பின் காரணமாக, அநேகர் மனமகிழ்ச்சியடைவார்கள்;
15
ஏனெனில் அவன் கர்த்தருடைய பார்வையில் உயர்வானவனாய் இருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை ரசத்தையோ மதுபானத்தையோ குடிக்கக் கூடாது. அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
16
அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்கு திரும்பவும் கொண்டுவருவான்.
17
அவன் கர்த்தருக்கு முன்பாக எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் செல்வான். தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகளின் பக்கமாகத் திருப்புவான். கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானமான வழிக்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக ஆயத்தமாக்கப்பட்ட மக்களை அவருக்காகத் தயார் செய்வான்” என்றான்.
18
அப்போது சகரியா அந்த தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் வயோதிபனாய் இருக்கின்றேன். என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே” என்றார்.
19
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் பிரசன்னத்தில் நிற்கின்ற காபிரியேல். உம்மிடம் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உமக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
20
ஆனாலும், நீரோ குறித்த காலத்தில் நிறைவேறப் போகின்ற என் வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இப்போதிலிருந்து இவையெல்லாம் நிகழும் நாள் வரைக்கும் நீர் பேச முடியாதவராக மௌனமாய் இருப்பீர்” என்றான்.
21
அதேவேளையில் சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மக்கள், அவர் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கின்றார் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
22
அவர் வெளியே வந்தபோது, அவரால் அவர்களோடு பேச முடியவில்லை. அதனால் அவர் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் பேச முடியாதவராக இருந்தபடியால் அவர்களுடன் சைகை மூலமாக பேசினார்.
23
அவரது பணி செய்யும் காலம் முடிவடைந்தபோது, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.
24
இந்த நாட்களுக்குப் பின் அவரது மனைவி எலிசபெத் கருத்தரித்து, ஐந்து மாதங்களாக பிறர் கண்ணில் படாதிருந்தாள்.
25
அப்போது அவள், “கர்த்தரே இதைச் செய்தார். இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவு காட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
26
ஆறாம் மாதத்தில், கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்ற பட்டணத்திலுள்ள ஒரு கன்னிப்பெண்ணிடம், காபிரியேல் தூதனை இறைவன் அனுப்பினார்.
27
அந்த கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள். அவள் தாவீதின் வழித்தோன்றலான யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.
28
அந்தத் தூதன் அவளிடம் வந்து, “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கின்றார்” என்றான்.
29
அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்தவளாய், இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
30
அப்போது அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
31
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
32
அவர் உயர்வானவராய் இருப்பார். அதி உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
33
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.
34
அப்போது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படி நடக்கும்? இன்னும் நான் கன்னியாய் இருக்கின்றேனே” என்றாள்.
35
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதி உன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார்.
36
உனது உறவினளான எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கின்றாள். கருத்தரிக்க முடியாதவள் என எண்ணப்பட்டவள் இப்போது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
37
இறைவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை” என்றான்.
38
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை. நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.
39
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு ஆர்வத்தோடு விரைந்து சென்றாள்.
40
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் சென்று, எலிசபெத்துக்கு ஆசி கூறினாள்.
41
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும், அவளுடைய வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42
உரத்த குரலில், “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப் போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
43
எனது ஆண்டவரின் தாய் என்னிடம் வர, நான் எவ்வளவாய் தயவு பெற்றேன்!
44
உமது வாழ்த்துதலின் சத்தம் கேட்டதுமே, எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
45
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
46
அப்போது மரியாள்: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்.
49
ஏனெனில் வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார். பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
50
அவருக்குப் பயப்படுகின்றவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார்.
51
அவர் தமது வலிய கரத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை சிதறடித்தார்.
52
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ உயர்த்தினார்.
53
பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
54
ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் என்றென்றுமாக இரக்கம் காண்பிப்பேன் என,
55
அவர் நம்முடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவில்கொண்டு, தமது பணியாளனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்” என்று பாடினாள்.
56
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதன்பின் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.
57
எலிசபெத்திற்கு பிள்ளை பெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
58
அவளுடைய அயலவர்களும், உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
59
எட்டாம் நாளில், பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்வதற்காக அயலவர்களும் உறவினர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே, சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
60
ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
61
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினர்களுள் அந்தப் பெயருடைய எவரும் இல்லையே” என்றார்கள்.
62
பின்னர் அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறார் என்று அறிவதற்கு, அவரிடம் சைகையினால் கேட்டார்கள்.
63
அவர் ஒரு கற்பலகையைக் கேட்டு வாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினார்.
64
உடனே அவரது வாய் திறக்கப்பட்டு பேசத் தொடங்கி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.
65
அயலவர்கள் எல்லோரும் திகிலடைந்தார்கள். இந்தக் காரியங்களைக் குறித்து யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
66
இதைக் கேள்விப்பட்ட எல்லோரும், “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்று சிந்தித்தார்கள். ஏனெனில், கர்த்தரின் கரம் அவனுடன் இருந்தது.
67
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
68
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக! ஏனெனில் அவர் தம்முடைய மக்களைத் தேடி வந்து மீட்டுக்கொண்டார்.
69
அவர் தமது அடியவன் தாவீதின் குடும்பத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான வல்லமையான இரட்சணியக் கொம்பை எழுப்பியிருக்கிறார்.
70
இதை தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக நெடுங்காலத்திற்கு முன்பே அவர் சொல்லியிருந்தார்.
71
அதன்படி, நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
72
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய முற்பிதாக்களுக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.
73
மேலும், நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருக்கின்றபடி,
74
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, அவருக்கு முன்பாகப் பயமின்றி பணி செய்யவும்,
75
நாம் உயிரோடிருக்கின்ற காலமெல்லாம் அப்பணியை பரிசுத்தத்தோடும் நீதியோடும் செய்யவும் நமக்கு வழியமைத்தார்.
76
“என் பிள்ளையே, நீயோ, அதி உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்று அழைக்கப்படுவாய்; ஏனெனில், நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி அவருக்கு முன்பாகப் போவாய்.
77
அவருடைய மக்களுக்கு, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதனால் கிடைக்கும் இரட்சிப்பின் அறிவைத் தெரிவிப்பாய்.
78
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தினாலே, பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மிடம் வருகின்றது.
79
அது இருளில் வாழ்கின்றவர்களுக்கும், மரண இருளில் இருக்கின்றவர்களுக்கும் ஒளியைத் தந்து, நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தும்.”
80
குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தான்; அவன் இஸ்ரயேலரின் முன் வெளியரங்கமாக வரும் காலம் வரைக்கும் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தான்.
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24