bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
1 Peter 1
1 Peter 1
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும் இந்த உலகத்தில் அந்நியர்களாகவும் பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டும் இருக்கின்ற உங்களுக்கு எழுதுகின்றதாவது:
2
ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால், இயேசு கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும் அவருடைய இரத்தம் தெளிக்கப்பட்டு சுத்தமாக்கப்படவும் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கின்றீர்கள். கிருபையும், சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
3
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருக்கின்றவருக்கு துதி உண்டாவதாக! அவர் தமது மகா இரக்கத்தினாலே நமக்கு ஒரு புதிதான பிறப்பை, இயேசு கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்ததன் மூலமாக கொடுத்திருக்கிறார். இதனால், நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
4
அந்த நம்பிக்கையுடன் நமக்கென உரிமைச் சொத்தும் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப் போவதுமில்லை.
5
நீங்களோ, கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அந்த இரட்சிப்பு வரும்வரை விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள்.
6
இப்போது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் பொருட்டு நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருந்தாலும், இந்த இரட்சிப்பைக் குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள்.
7
தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தே போகின்றது. ஆனால் தங்கத்திலும் அதிக பெறுமதி வாய்ந்த உங்கள் விசுவாசம் உண்மையானது என நிரூபிக்கப்படுவதற்காகவே இந்த துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, இப்படியாக நிரூபிக்கப்பட்ட அந்த விசுவாசத்தின் காரணமாக துதி, மகிமை, மாண்பு உண்டாகவே இப்படி நேரிட்டது.
8
நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும் இப்போது அவரில் விசுவாசமாயிருக்கின்றீர்கள். வார்த்தைகளினால் விபரிக்க முடியாத மகிமையான மனமகிழ்ச்சியாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
9
இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
10
உங்களுக்கு வரவிருந்த இந்தக் கிருபையைப் பற்றிச் சொன்ன இறைவாக்கினர்கள், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தார்கள்.
11
தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்தும் அதைத் தொடர்ந்து வரப் போகின்ற மகிமையைக் குறித்தும் முன்னறிவித்தபோது, ஆவியானவர் எந்தக் காலத்தை, எந்தச் சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கின்றார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
12
பிற்காலத்தில் வரவிருந்த உங்களுக்காகவே அவர்கள் ஊழியம் செய்தார்கள் என்பதும், அது தங்களுக்காக அல்ல என்பதும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள், உங்களுக்கு இப்போது கூறியவை இறைவாக்கினர்களுக்கு அப்பொழுதே வெளிப்படுத்தப்பட்டு விட்டன. இவற்றைக் காண்பதற்கு இறைதூதர்களும் பேராவலாய் இருக்கின்றார்கள்.
13
ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்குத் தரப்படவிருக்கும் கிருபையின் மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
14
நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகின்ற பிள்ளைகளாய் இருங்கள்.
15
உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருப்பதைப் போலவே, நீங்களும் உங்கள் எல்லா செய்கைகளிலும் பரிசுத்தமாக இருங்கள்.
16
ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கின்றதே.
17
ஒவ்வொருவருடைய செயலையும் பக்கச்சார்பு இன்றி நியாயம் தீர்க்கின்றவரை நீங்கள் பிதா என்று அழைத்து ஆராதிப்பதனால் இங்கே நீங்கள் அந்நியர்களாக வாழும் வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
18
உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்து போகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை என்பதை அறிந்திருக்கின்றீர்கள்.
19
மாறாக களங்கமோ, குறைபாடோ இல்லாத செம்மறியாட்டுக் குட்டியானவராகிய கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள் என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள்.
20
உலகம் படைக்கப்படும் முன்பாகவே அவர் தெரிந்துகொள்ளப்பட்டவர், ஆனாலும் உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
21
அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கின்றீர்கள். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படியாக இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
22
நீங்கள் உங்கள் சகோதரர்களை உண்மையாக நேசிக்கும்படியாக சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்கள் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தியுள்ளீர்கள், ஆகவே ஒருவரில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
23
நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் பிறப்பு அழிந்து போகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும், நிலைத்து நிற்பதுமானது.
24
ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களுடைய எல்லா மகிமையும் புல்வெளியின் பூக்களைப் போல் இருக்கின்றது. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
25
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.” இந்த வார்த்தையே உங்களுக்கு நற்செய்தியாகவும் பிரசங்கிக்கப்பட்டது.
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
Recommended Reading
Commentary
1 Peter Commentaries
→
Devotional
1 Peter Devotional Guide
→
Get This Bible
TRV Study Bible
→