bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
1 Peter 5
1 Peter 5
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
உங்கள் சக மூப்பராகவும் கிறிஸ்து அனுபவித்த துன்பங்களுக்கு சாட்சியாகவும், வெளிப்படப் போகும் மகிமையில் பங்குபற்றுபவராகவும் இருக்கின்ற நான், உங்கள் மத்தியில் இருக்கும் மூப்பர்களிடம் வேண்டிக்கொள்கின்றதாவது:
2
உங்களுடைய பராமரிப்பின் கீழ் இருக்கும் இறைவனுடைய மந்தையாகிய மக்களை மேய்ப்பவர்களாயிருந்து அவர்களைப் பராமரியுங்கள். நீங்கள் கண்காணிப்பாளர்களாகப் பணி செய்ய வேண்டியிருக்கின்றதே என்பதற்காக அல்லாமல், நீங்கள் அப்படி இருக்க வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றபடியால், மனவிருப்பத்துடன் கண்காணிப்பைச் செய்யுங்கள்; பணம் சம்பாதிக்கும் பேராசையுடன் அதைச் செய்யாமல் மனவிருப்புடன் அந்த ஊழியத்தைச் செய்யுங்கள்.
3
உங்களிடம் பொறுப்பளிக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாய் இல்லாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள்.
4
அப்படி நடப்பீர்களானால், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது ஒருபோதும் மங்கிப் போகாத மகிமையின் கிரீடத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
5
இளைஞர்களே! அவ்வாறே நீங்களும் மூப்பர்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். நீங்கள் எல்லோரும் மற்றவர்களுடன் பழகும்போது மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கின்றார்.”
6
ஆகவே, இறைவன் உங்களை உரிய நேரத்தில் உயர்த்துவதற்காக, இறைவனுடைய வலிமை மிக்க கரத்தின் கீழே உங்களைத் தாழ்த்துங்கள்.
7
உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மீது அக்கறை உள்ளவராய் இருக்கின்றார்.
8
தன்னடக்கம் உள்ளவர்களாயும், விழிப்புள்ளவர்களாயும் இருங்கள். உங்கள் பகைவனான பிசாசு, கர்ச்சிக்கின்ற சிங்கத்தைப் போல் யாரை இரையாக்கலாம் என்று தேடித் திரிகிறான்.
9
விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் உலகமெங்குமுள்ள உங்கள் சகோதர சகோதரிகளும் இதேவிதமான வேதனைகளை அடைந்து சகித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
10
எல்லாக் கிருபையையும் கொடுக்கின்ற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்படுத்தி பலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார்.
11
என்றென்றும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென்.
12
சீலாவின் உதவியுடனே நான் உங்களுக்குச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அவனை ஒரு உண்மையுள்ள சகோதரனாகவே நான் எண்ணுகிறேன். உங்களை உற்சாகப்படுத்தவும், இதுவே இறைவனின் மெய்யான கிருபை என்று உங்களுக்குச் சாட்சியாகக் கூறவும் இதை எழுதியிருக்கிறேன். எனவே, இந்தக் கிருபையில் நீங்கள் உறுதியாய் நிலைத்து நில்லுங்கள்.
13
உங்களுடனேகூட தெரிவு செய்யப்பட்ட புதிய பாபிலோனிலுள்ள திருச்சபையாரும், உங்களுக்கு தங்களது வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். அப்படியே என் மகன் மாற்குவும் வாழ்த்துதல்களை அனுப்புகிறான்.
14
ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துத் தெரிவியுங்கள். கிறிஸ்துவில் இருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5
Recommended Reading
Commentary
1 Peter Commentaries
→
Devotional
1 Peter Devotional Guide
→
Get This Bible
TRV Study Bible
→