bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Romans 1
Romans 1
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 2 →
1
கிறிஸ்து இயேசுவின் ஊழியரான பவுலாகிய நான், அப்போஸ்தலராக இருக்கும்படி இறைவனால் அழைக்கப்பட்டும் இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதற்கென்று விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கின்றேன்.
2
இறைவன் இந்த நற்செய்தியை இறைவாக்கினர் ஊடாக பரிசுத்த வேதவசனங்களில் முன்கூட்டியே வாக்குறுதி அளித்துள்ளார்.
3
இந்த நற்செய்தி இறைவனுடைய மகனைப் பற்றியது; இவரே மனிதனாகத் தாவீதின் சந்ததியில் பிறந்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
4
இவர் பரிசுத்தத்தின் ஆவியினாலும், மரணித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை அடைந்ததாலும் இறைவனின் மகன் என்று வல்லமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார்.
5
அவரின் பேரில் எல்லா இனத்தவர்களையும் விசுவாசத்தினாலே வரும் கீழ்ப்படிவான வாழ்விற்கு அழைப்பதற்கான கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் நாம் அவருக்கூடாக வரமாகப் பெற்றோம்.
6
இப்படியாக இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமாகும்படி அழைக்கப்பட்ட யூதர் அல்லாதோரில் நீங்களும் அடங்கி உள்ளீர்கள்.
7
இறைவனால் அன்பு செய்யப்பட்டு பரிசுத்தவான்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டுள்ள ரோம் நகரில் இருக்கின்ற, உங்கள் அனைவருக்கும் நான் எழுதுவதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
8
முதலாவதாக, உங்கள் எல்லோருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாக என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் உங்கள் விசுவாசத்தைக் குறித்து உலகம் எங்கும் பேசப்படுகிறது.
9
நான் மன்றாடுகின்ற எல்லா வேளைகளிலும் உங்களைத் தொடர்ச்சியாக நினைவுகூருகிறேன் என்பதற்கு இறைவனே சாட்சியாக இருக்கின்றார். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்திக்காகவே நான் என் ஆவியில் ஊழியம் செய்கின்றேன்.
10
இறைவனுடைய சித்தத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறேன்.
11
ஏனெனில் உங்களைப் பலப்படுத்துவதற்காக, ஆவிக்குரிய அன்பளிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு உங்களைக் காண நான் ஆவலாயிருக்கிறேன்.
12
இதனால் உங்களை நானும் என்னை நீங்களுமாக, நாம் ஒருவரையொருவர் விசுவாசத்திலே ஊக்குவிக்கலாம்.
13
பிரியமானவர்களே, நான் மற்ற இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியத்தின் பலாபலன்களைப் பெற்றது போலவே, உங்கள் மத்தியிலும் பலாபலன்களைப் பெறும் பொருட்டு அங்கே வருவதற்குப் பல முறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரை வர முடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் தெரியாதிருப்பதை நான் விரும்பவில்லை.
14
கிரேக்கரோ, கிரேக்கர் அல்லாதவர்களோ, ஞானிகளோ, மூடர்களோ என்று பாராமல் அனைவருக்குமே நான் கடமைப்பட்டவனாய் இருக்கின்றேன்.
15
அதனாலேயே ரோம் நகரில் இருக்கின்ற உங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவலாயிருக்கிறேன்.
16
ஏனெனில் நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பைக் கொடுக்கின்ற இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
17
“நீதிமான் விசுவாசத்தினாலே வாழ்வார்” என்று எழுதப்பட்டிருக்கின்றபடி, ஆரம்பம் முதல் இறுதி வரை விசுவாசத்தினாலே வருகின்ற இறைவனின் நீதியானது இந்த நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
18
அவ்வாறே, மனிதர்கள் தங்களுடைய தீய செயல்களால் சத்தியத்தை அடக்கி வைப்பதால் இறைவனை மறுதலிக்கும் அவர்களுடைய நடத்தைக்கும் தீய செயல்களுக்கும் எதிராக, பரலோகத்திலிருந்து இறைவனுடைய கோபமும் வெளிப்படுத்தப்படுகிறது.
19
ஏனெனில் இறைவனைப்பற்றி அவர்கள் அறியக் கூடியவற்றை இறைவனே அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதால், அவை அவர்களுக்குத் தெளிவாக இருக்கின்றன.
20
உலகம் படைக்கப்பட்டது முதல் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் தன்மைகளான அவருடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகியன படைக்கப்பட்டவைகளிலிருந்து உணரக் கூடியதாய் உள்ளன. எனவே மனிதர்கள் தம் துர்நடத்தையை நியாயப்படுத்த வழியில்லை.
21
அவர்கள் இறைவனை அறிந்திருந்த போதிலும் அவரை இறைவன் என்று மகிமைப்படுத்தவோ, அவருக்கு நன்றி செலுத்தவோ இல்லை. இதனால் அவர்களது சிந்தனையில் பயனற்ற வாதங்கள் தோன்றி அவர்களது மந்தமான இருதயங்கள் உணர்வற்று இருளால் நிறைந்தன.
22
அவர்கள் தங்களை அறிஞர்கள் என்று திடமாக சொல்லிக் கொண்டாலும் மூடர்களாகி,
23
அழியாமையுடைய இறைவனின் மேன்மையான மகிமைக்கு மாற்றீடாக அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களைச் செய்தார்கள்.
24
எனவே அவர்களுடைய இருதயத்தின் ஆசை வெறிகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான உறவுகொள்ளும்படி இறைவன் அவர்களை துர்நடத்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார்.
25
ஏனெனில், அவர்கள் இறைவனைப் பற்றிய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி, படைக்கப்பட்டவைகளை வழிபட்டு பணி செய்தார்கள். படைத்தவரையோ விட்டுவிட்டார்கள். அவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென்.
26
இதனால், இறைவன் வெட்கக்கேடான காம வேட்கைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கைவிட்டார். அவர்களுடைய பெண்கள் இயல்பான பாலுறவைவிட்டு, இயற்கைக்கு விரோதமான உறவால் அதை மாற்றீடு செய்தார்கள்.
27
அவ்விதமாகவே ஆண்களும் பெண்களுடனான இயல்பான பாலுறவைக் கைவிட்டு, ஆண்கள் மேல் ஆண்கள் வேட்கைகொண்டு, ஆண்களுடன் ஆண்கள் வெட்கக்கேடான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையினால் வருந்துகிறார்கள்.
28
மேலும் அவர்கள் இறைவனைப் பற்றிய உண்மை அறிவை ஏற்றுக்கொண்டு வாழ்வதைப் பயனுள்ளதாக எண்ணாதபடியால், இறைவன் அவர்களைச் செய்யத் தகாதவைகளைச் செய்கின்ற சீர்கெட்ட சிந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார்.
29
அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும் தீமையினாலும் பேராசையினாலும் சீர்கேட்டினாலும் நிறைந்தவர்களாகி, பொறாமையினாலும் கொலையினாலும் சண்டையினாலும் வஞ்சனையினாலும் பகையினாலும் நிறைந்தவர்களானார்கள்.
30
அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவும், தூற்றுகின்றவர்களாகவும், இறைவனை வெறுக்கின்றவர்களாகவும், அவமரியாதை செய்கின்றவர்களாகவும், அகந்தை கொண்டவர்களாகவும், பெருமை பேசுகின்றவர்களாகவும், தீமை செய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும்,
31
உணர்வில்லாதவர்களாகவும், உண்மை இல்லாதவர்களாகவும், அன்பில்லாதவர்களாகவும், ஈவிரக்கம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
32
இப்படிப்பட்டவைகளைச் செய்கின்றவர்கள் மரணத்துக்கே தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தை புரிந்து கொண்டிருந்தாலும்கூட, இவைகளைத் தாங்கள் தொடர்ந்து செய்வது மட்டுமல்லாது, இவைகளைச் செய்கின்றவர்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றார்கள்.
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16