bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Romans 10
Romans 10
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
1
பிரியமானவர்களே, இஸ்ரயேலர் மீட்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய இருதயத்தின் ஆசையும் நான் இறைவனிடம் ஏறெடுக்கும் மன்றாடுதலுமாய் இருக்கின்றது.
2
இறைவனைக் குறித்த வைராக்கியம் அவர்களுக்கு இருந்தாலும், அது அவர்கள் உண்மையை உறுதியாகப் புரிந்து கொண்டதால் வந்த ஒன்றல்ல.
3
ஏனெனில், இறைவனின் நீதிமானாக்கும் முறைமையை அவர்கள் புரிந்துணர்ந்துகொள்ளாதவர்களாக, தாங்களே தங்களை நீதிமானாக்கிக்கொள்ள முயற்சிப்பதால், அவர்கள் இறைவனின் நீதிமானாக்கும் முறைமைக்குக் கட்டுப்படாதவர்களாக இருக்கின்றார்கள்.
4
ஏனென்றால் விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் நீதிமானாகும்படி, கிறிஸ்துவே நீதிச்சட்டத்தின் முடிவு.
5
நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்து நீதிமானாக்கப்படுவதைக் குறித்து மோசே இப்படிச் சொல்கிறார்: “ஒருவர் நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்தால், சட்டம் அவருக்கு வாழ்வளிக்கும்.”
6
ஆனால் விசுவாசத்தின் ஊடாக நீதிமானாக்கப்படுவதைக் குறித்தோ வேதவசனத்தில் இவ்விதமாய் சொல்லப்படுகிறது: “யார் பரலோகத்துக்கு ஏறிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவைக் கீழே அழைத்து வருவதற்காக) என்று உன் இருதயத்தில் யோசிக்காதே.
7
அல்லது, “யார் பாதாளத்துக்குள்ளே இறங்கிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி மேலே அழைத்து வருவதற்காக) என்றும் யோசிக்காதே.
8
வேதவசனம் உண்மையில் என்ன சொல்கின்றது? “இறைவனின் வார்த்தை உன் அருகே உள்ளது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கின்றது” என்கிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசங்கிக்கிறோம்.
9
அதாவது, “இயேசுவே ஆண்டவர்” என்று உங்கள் வாயினால் அறிவித்து, இறைவன் அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் நீங்கள் மீட்கப் படுவீர்கள்.
10
உங்கள் இருதயத்தில் விசுவாசித்து நீதிமானாக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் ஒப்புக்கொண்டு அறிவித்து மீட்கப்படுகிறீர்கள்.
11
“அவர்மீது விசுவாசம் வைக்கின்ற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை” என வேதவசனம் சொல்கின்றது.
12
ஏனெனில் யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. ஒரே இறைவனே எல்லோருக்கும் இறைவனாய் இருக்கின்றபடியால் அவரை அழைக்கின்ற அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தாராளமாக வழங்குகிறார்.
13
அதனால், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் மீட்கப்படுவார்கள்” என்று எழுதியிருக்கிறது.
14
ஆனால் தாங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவரிடம் தம்மை மீட்குமாறு அவர்கள் அழைப்பு விடுக்கக் கூடுமோ? இதுவரை அவரைப்பற்றி கேள்விப்படவே இல்லையெனில், எப்படி அவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்? எவராவது அவர்களுக்கு செய்தியை பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் அதைக் கேள்விப்படுவதும் எப்படி?
15
பிரசங்கிப்பவர்கள் அனுப்பப்படாவிட்டால், அவர்கள் எப்படி பிரசங்கிப்பார்கள்? அதனாலேயே, “நற்செய்தியைக் கொண்டுவருகின்றவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை” என்று எழுதப்பட்டிருக்கிறது.
16
ஆனால் கேட்டவர்கள் எல்லோரும் நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவேதான் ஏசாயா, “கர்த்தாவே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?” என்றார்.
17
எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமாக விசுவாசம் வருகின்றது. அவர்கள் கேட்டது பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக வருகின்றது.
18
அப்படியானால் இஸ்ரயேலர் நற்செய்தியைக் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கின்றேன்? ஆம், நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனென்றால் வேதவசனம் இறைவனின் செய்தியைப்பற்றி, “செய்தியை கொண்டுவருகின்றவர்களின் குரல் பூமி எங்கும் சென்றது. அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் சென்றன” என்கிறது.
19
இஸ்ரயேலர்கள் அதை புரிந்துகொள்ளவில்லையா? என நான் கேட்கின்றேன். “ஒரு இனமாகக் கருதப்படாதவர்களைக்கொண்டு, நான் உங்களுக்கு எரிச்சலூட்டுவேன்; புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு இனத்தைக்கொண்டு, நான் உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்று இறைவன் மோசேயின் ஊடாகச் சொல்கின்றார்.
20
“என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்” என இறைவன் சொன்னதை ஏசாயா துணிவுடன் சொல்கின்றார்.
21
ஆனால் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாத, பிடிவாதமுள்ள மக்களை நோக்கி, நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்று இறைவன் சொன்னதையே அவர் அறிவித்தார்.
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16