bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
1 Corinthians 13
1 Corinthians 13
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
1
நான் பல்வேறு மனித மொழிகளிலும் இறைதூதர்களின் மொழிகளிலும் பேசினாலும் அன்பற்றவனாய் இருந்தால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலம், ஓசையெழுப்பும் கைத்தாளம்.
2
நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய், எல்லா மறைபொருள்களையும் எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளைப் பெயர்க்கும் விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பற்றவனாய் இருந்தால் நான் அறவே வெற்று மனிதன்.
3
எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்புள்ளவனாய் இல்லாது போனால், எனக்கு எப்பயனும் இல்லை.
4
அன்பு பொறுமையுள்ளது, தயவுள்ளது. அன்பு பொறாமையற்றது, தற்பெருமை பேசாது, அகந்தையாயிராது,
5
வீம்புகொள்ளாது, அது தன்னலமற்றது, இலகுவில் கோபமடையாது, வன்மம் வைத்திருக்காது;
6
தீமையில் மகிழ்ச்சியடையாமல், மெய்மையில் மகிழ்ச்சியடையும்.
7
அன்பு அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், அனைத்தையும் விசுவாசிக்கும், எப்போதும் எதிர்பார்ப்பு உடையதாய் இருக்கும். அன்பு அனைத்திலும் நிலைகுலையாது உறுதியாய் இருக்கும்.
8
அன்பு ஒருபோதும் தோல்வியடைந்து ஓயாது, இறைவாக்கு ஓய்ந்து போகும், வேற்றுமொழிகள் ஒழிந்து போகும், அறிவும் மறைந்து போகும்,
9
நமது அறிவு குறைவுள்ளது, நமது இறைவாக்கு உரைத்தலும் முழுமையற்றது.
10
நிறைவுள்ளது வரும்போது குறைவுள்ளது மறைந்து போகும்.
11
நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறு பிள்ளையைப் போலவே பேசினேன். ஒரு சிறு பிள்ளையைப் போலவே சிந்தித்தேன். ஒரு சிறு பிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனானபோது சிறு பிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.
12
இப்போது ஒரு கண்ணாடியில் தெளிவற்ற விம்பத்தைக் காண்கின்றோம். பின்னால் வரும் காலத்தில், நாம் நேருக்கு நேராகப் பார்ப்போம். இப்போது பகுதியளவே அறிந்திருக்கிறேன். பின்னால் வரும் காலத்தில் நான் முழுமையாக அறிந்துகொள்வதோடு முழுமையாக அறிந்துகொள்ளப்படுவேன்.
13
இப்போது நிலைத்திருப்பவைகளான விசுவாசம், நல்ல எதிர்பார்ப்பு, அன்பு என்பவற்றுள் அன்பே மேன்மையானது.
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16