bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
1 Corinthians 2
1 Corinthians 2
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 3 →
1
பிரியமானவர்களே, நான் உங்களிடத்தில் வந்து, இறைவனைப் பற்றிய சாட்சியை உங்களுக்குப் பிரசித்தப்படுத்தியபோது, பேச்சுத் திறனுடனோ அல்லது மனித ஞானத்துடனோ வரவில்லை.
2
ஏனெனில் நான் உங்களோடு இருந்தபோது சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் அறியாதிருக்க உறுதி கொண்டிருந்தேன்.
3
நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்தோடும் வந்தபோது
4
என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் நாவன்மை உள்ள வார்த்தைகளாகவும் இருக்காமல் ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவனவாக இருந்தன.
5
ஏனென்றால் உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல் இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே அப்படிச் செய்தேன்.
6
நாங்கள் அறிவிப்பது இந்த யுகத்தின் ஞானமோ அல்லது இந்த யுகத்தை ஆளுகின்ற அழிந்து போகின்றவர்களின் ஞானமோ அல்ல. மாறாக முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் மெய்ஞானத்தின் செய்தியை அறிவிக்கிறோம்.
7
மறைபொருளானதும் ஒளித்து வைக்கப்பட்டதுமான இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றும் முன்பே நமது மகிமைக்கென நியமித்தார்.
8
யுகத்தை ஆளுகின்ற ஒருவரும் இதைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால், மகிமையின் ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே.
9
ஆனால் எழுதியிருக்கின்றபடி: “தம்மை நேசிக்கிறவர்களுக்கு இறைவன் ஆயத்தமாக்கி வைத்திருப்பவைகளை எந்தக் கண்ணும் காணவுமில்லை, எந்தக் காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் கற்பனை செய்யவுமில்லை.”
10
இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழங்களையும் ஆராய்கிறார்.
11
ஒரு மனிதனுக்குள் இருக்கும் அவனுடைய ஆவியைத் தவிர அவனுடைய சிந்தனைகளை யாரால் அறிய முடியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறிய மாட்டார்கள்.
12
நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளாமல் இறைவன் நமக்கு உரித்தாகக் கொடுத்தவற்றை புரிந்துகொள்ளும்படி, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம்.
13
ஆகவே நாங்கள் மனித ஞானம் கற்பித்த வார்த்தைகளினால் பேசாமல் ஆவியானவர் கற்பித்த வார்த்தைகளினால் பேசி, ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரியவற்றோடு ஒன்றிணைத்துக் காட்டுகிறோம்.
14
பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு முட்டாள்தனமாகத் தோன்றும். அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன.
15
ஆனால் ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து புரிந்துகொள்கின்றான். அவனையோ மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
16
ஏனெனில் வேதவசனம் சொல்கின்றபடி, “கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு, அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” ஆனால் நாமோ கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாய் இருக்கின்றோம்.
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16