bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
1 Corinthians 16
1 Corinthians 16
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
1
இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து கலாத்திய திருச்சபைகளுக்கு கொடுத்த அறிவுரையின்படியே நீங்களும் செய்யுங்கள்.
2
நான் வரும்போது பணம் சேகரிக்காதபடி, வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை ஒதுக்கி சேமித்து வையுங்கள்.
3
நான் அங்கு வரும்போது நீங்கள் அங்கீகரிக்கும் மனிதர்களிடம் உங்களது நன்கொடைகளைக் கொடுத்து, அறிமுகக் கடிதங்களோடு அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன்.
4
நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.
5
நான் மக்கெதோனியா வழியாகப் போக இருக்கின்றேன். மக்கெதோனியா நாட்டைக் கடந்து சென்ற பின் உங்களிடம் வந்து,
6
சிறிது காலம் உங்களுடன் தங்குவேன். அப்போது நான் தொடர்ந்து போக வேண்டிய எனது பயணத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்யலாம். ஏனெனில் ஒருவேளை குளிர் காலத்தை நான் உங்களுடனே கழிக்க நேரிடலாம்.
7
இப்பிரயாணத்தில் வெறுமனே உங்களைப் பார்த்துவிட்டு மட்டும் போவதில் எனக்கு விருப்பமில்லை. கர்த்தர் அனுமதிப்பாரென்றால் சிறிது காலம் உங்களுடன் கழிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
8
ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன்.
9
ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான பெரிய வாசல் எனக்காகத் திறந்திருக்கின்ற அதேநேரம் என்னை எதிர்க்கின்ற அநேகரும் அங்கிருக்கிறார்கள்.
10
தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் செய்கின்றது போலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கின்றானே.
11
ஆகவே ஒருவரும் அவனை இழிவாக நடத்தக் கூடாது. அவனை நான் மற்றச் சகோதரருடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றபடியால் என்னிடம் திரும்பி வரும்படி அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள்.
12
நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கின்றதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான்.
13
கவனமாயிருங்கள், உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள், பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள்.
14
அனைத்தும் அன்போடு செய்யப்படட்டும்.
15
ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணி செய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்போதும் நான் உங்களை வேண்டிக்கொள்கின்றதாவது:
16
இப்படிப்பட்டவர்களுக்கும், கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் கீழ்ப்படிந்து நடவுங்கள்.
17
ஸ்தேவானும் பொர்த்துனாத்தும் அகாயுவும் இங்கு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.
18
அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்க வேண்டும்.
19
ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகள், உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவர்களுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபையோரும் ஆண்டவருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
20
இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்து தெரிவியுங்கள்.
21
பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன்.
22
யாராவது ஆண்டவரில் அன்பாயிருக்காவிட்டால் அவன் சபிக்கப்பட்டவன். ஆண்டவரே வாரும்!
23
நம்முடைய ஆண்டவர் இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக.
24
கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16