bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Matthew 22
Matthew 22
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 23 →
1
திரும்பவும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலமாகப் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது:
2
“பரலோக அரசு, ஒரு அரசன் தனது மகனுக்கென ஒரு திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.
3
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் பணியாட்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள்.
4
“அவன் இன்னும் சில பணியாட்களை அனுப்பி, ‘நான் என்னுடைய விருந்தை ஆயத்தப்படுத்தி விட்டேன்; சிறப்பான மாமிச விருந்து உங்களுக்கென்று ஆயத்தமாய் இருக்கின்றது. திருமண விருந்துக்கு வாருங்கள்’ என்று அழைக்கப்பட்டவர்களிடம் சொல்லுங்கள் என்றான்.
5
“ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள். ஒருவன் தனது வயலுக்கும், வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் சென்றான்.
6
மற்றவர்களோ, அரசனுடைய பணியாட்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள்.
7
அரசன் கடுங் கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.
8
“பின்பு அவன் தன் பணியாட்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் வரத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள்.
9
இப்போது வீதிகளின் மூலைகளுக்குப் போங்கள், யாரையெல்லாம் நீங்கள் காண்கின்றீர்களோ, அவர்களையெல்லாம் விருந்துக்கு அழையுங்கள்’ என்றான்.
10
எனவே பணியாட்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் அழைத்து ஒன்றுசேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது.
11
“அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை அணிந்திராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான்.
12
அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டபோது, அவன் பேச்சற்று நின்றான்.
13
“அப்போது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே வேதனையான பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான்.
14
“ஏனெனில் அநேகர் அழைக்கப்பட்டாலும், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரே.”
15
பின்பு பரிசேயர்கள் போய், இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவரைச் சிக்க வைக்க சதித் திட்டமிட்டார்கள்.
16
அவர்கள், தங்கள் சீடர்களை ஏரோதியர்களுடன் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை உண்மையின்படி போதிக்கிறவருமாய் இருக்கின்றீர். நீர் எவருடைய தராதரத்தையும் பார்க்காதவர். எனவே நீர் பிறருடைய கருத்துக்களை எல்லாம் ஏற்பவர் அல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
17
ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா இல்லையா? உம்முடைய அபிப்பிராயம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
18
ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வெளிவேடக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
19
வரி செலுத்துவதற்காக உபயோகிக்கும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தினாரி பணத்தை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
20
அவர் அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இதில் உள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையது?” என்று கேட்டார்.
21
அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்போது அவர் அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
22
அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து, அவரைவிட்டுப் போனார்கள்.
23
அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கின்ற சதுசேயர், அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள்.
24
“போதகரே, ‘ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் இறந்துபோனால், இறந்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்.
25
எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்குவிட்டுச் சென்றான்.
26
அதன்படி, இரண்டாம் மூன்றாம் சகோதரன் என ஏழாவது சகோதரன் வரை அப்படியே நடந்தது.
27
இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.
28
அப்படியானால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
29
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றீர்கள், ஏனெனில் வேதவசனங்களையோ, இறைவனின் வல்லமையையோ நீங்கள் அறியவில்லை.
30
உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள்.
31
இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
32
‘நானே ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமாயிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கின்றாரே. அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.
33
மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
34
இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர்கள் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள்.
35
அவர்களில் நீதிச்சட்டத்தில் நிபுணனான ஒருவன், கேள்வி கேட்டு அவரைச் சோதிப்பதற்காக,
36
“போதகரே, நீதிச்சட்டத்தில் மிகப் பெரிய கட்டளை எது?” என்றான்.
37
இயேசு அவனுக்குப் பதிலாக, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’
38
இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.
39
இரண்டாவதும் இதைப் போன்றதே: ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு.’
40
முழு நீதிச்சட்டத்துக்கும், இறைவாக்குகளுக்கும் இந்த இரண்டு கட்டளைகளே அடிப்படையாக இருக்கின்றன” என்றார்.
41
பரிசேயர்கள் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
42
“நீங்கள் மேசியாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
43
அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியினால் பேசுகையில், அவரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தது எப்படி? ஏனெனில்,
44
“கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம்: ‘நான் உமது பகைவரை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று தாவீது சொல்லியிருக்கின்றாரே.
45
எனவே, தாவீதே மேசியாவை ஆண்டவர் என்று அழைத்திருக்கிறார். அப்படியென்றால் அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்று கேட்டார்.
46
ஒருவராலும் ஒரு வார்த்தையைக்கூட அவருக்குப் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28