bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Matthew 27
Matthew 27
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 28 →
1
மறுநாள் அதிகாலையில் தலைமை மதகுருக்களும் மக்கள் சமூகத் தலைவர்களும் இயேசுவை மரணதண்டனைக்கு உள்ளாக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள்.
2
அவர்கள் அவரைக் கட்டி, ஆளுநர் பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.
3
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், இயேசு மரணத் தீர்ப்புக்குள்ளானதைக் கண்டு, மனத்துயரம் அடைந்தான். எனவே, தனக்குக் கொடுத்த முப்பது வெள்ளிக் காசுகளை தலைமை மதகுருக்களிடமும் சமூகத் தலைவர்களிடமும் திருப்பி கொடுத்தான். அவன் அவர்களிடம்,
4
“நான் குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து, பாவம் செய்துவிட்டேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதுபற்றி எங்களுக்கு என்ன? அது உன் பாடு” என்றார்கள்.
5
எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டு, அங்கிருந்து சென்று தூக்கிலிட்டுக் கொண்டான்.
6
தலைமை மதகுருக்கள் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப் பழியுள்ள பணம். ஆகையால் இதை திரவியக் களஞ்சியத்தில் போடுவது, நீதிச்சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள்.
7
எனவே அவர்கள் கலந்தாலோசித்து, அந்நியரை அடக்கம் செய்வதற்காக அந்தப் பணத்தைக்கொண்டு, குயவனுடைய நிலத்தை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள்.
8
அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்த நிலம்” என்று அழைக்கப்படுகிறது.
9
இறைவாக்கினன் எரேமியாவினால், “இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலையான முப்பது வெள்ளிக் காசுகளை அவர்கள் எடுத்து,
10
கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள்” என்று கூறப்பட்டது நிறைவேறியது.
11
இயேசுவை கொண்டுவந்து ஆளுநர் முன்னால் நிறுத்தினார்கள். ஆளுநர் அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.
12
ஆனால் தலைமை மதகுருக்களாலும் சமூகத் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
13
அப்போது பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் சாட்சியத்தை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான்.
14
ஆனால் இயேசுவோ ஒரு குற்றச்சாட்டுக்கும் பதில் கூறாததும், மறுமொழி ஒன்றும் சொல்லாததும் ஆளுநரை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
15
பண்டிகையின்போது, மக்கள் கேட்டுக்கொள்ளும் சிறைக் கைதியை விடுதலை செய்வது ஆளுநரின் வழக்கமாயிருந்தது.
16
அக்காலத்தில் பரபாஸ் என்னும் பேர்போன ஒரு கைதி அவர்களது காவலில் இருந்தான்.
17
எனவே ஆளுநரின் வீட்டிற்கு முன் மக்கள் ஒன்றுகூடி வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “யாரை நான் உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும்: பரபாசையா அல்லது கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவையா?” எனக் கேட்டார்.
18
ஏனெனில், பொறாமையினாலேயே அவர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
19
பிலாத்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி, “அந்த குற்றமற்ற மனிதரை ஒன்றும் செய்ய வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு நான் இன்று கனவில் மிகவும் வேதனைப்பட்டேன்” என்று ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பினாள்.
20
ஆனால் தலைமை மதகுருக்களும் மூப்பர்களும், பரபாசை விடுதலை செய்யும்படியும், இயேசுவை கொலை செய்யும்படியும் கேட்பதற்காக மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
21
“இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்ய வேண்டும்?” என ஆளுநர் கேட்டார். “பரபாசை” என அவர்கள் பதிலளித்தார்கள்.
22
“அப்படியானால் கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று பதிலளித்தார்கள்.
23
“ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.
24
தனது முயற்சியால் பயன் இல்லை என்றும், மாறாக ஒரு கலகம் ஆரம்பிக்கிறது என்றும் பிலாத்து கண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, மக்கள் கூட்டத்திற்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான். பின்பு அவன், “இந்த மனிதனுடைய இரத்தப் பழிக்கு, நீங்களே பொறுப்பாளிகள். நானோ குற்றமற்றவன்” என்றான்.
25
அதற்கு எல்லா மக்களும், “அவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் சுமத்தப்படட்டும்” என்றார்கள்.
26
அப்போது பிலாத்து, அவர்கள் கேட்டபடியே பரபாசை விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையடிக்கும், சிலுவையில் அறையப்படுவதற்கும் ஒப்படைத்தான்.
27
அதன்பின் ஆளுநரின் இராணுவ வீரர்கள், இயேசுவைத் தங்கள் தலைமையகத்துக்குக் கொண்டுபோய், அவரைச் சுற்றி முழு இராணுவ வீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.
28
அங்கே அவர்கள் அவரது உடைகளைக் களைந்து, கருஞ்சிவப்பு மேலாடையை அவருக்கு அணிந்தார்கள்.
29
அவர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தைச் செய்து, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். அவர்கள் அவரது வலதுகையில் ஒரு தடியைக் கொடுத்து, அவர் முன்னால் முழந்தாழிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி, அவரை ஏளனம் செய்தார்கள்.
30
அவர்கள் அவர்மீது துப்பி, அந்தத் தடியை எடுத்து அவருடைய தலையில் தொடர்ந்து அடித்தார்கள்.
31
அவர்கள் அவரை ஏளனம் செய்த பின், அந்த மேலாடையைக் கழற்றிவிட்டு அவரது உடையை உடுத்தினார்கள். அதன்பின் அவர்கள் அவரைச் சிலுவையில் அறைவதற்கு கொண்டுபோனார்கள்.
32
அவர்கள் அவரை வெளியே கொண்டுபோகும்போது, சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, சிலுவையைத் தூக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
33
மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்கு அவர்கள் வந்தபோது,
34
இயேசுவுக்கு கசப்பு கலந்த திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதை ருசி பார்த்த பின் குடிக்க மறுத்தார்.
35
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின், அவரது உடைகளுக்காக சீட்டு போட்டு, அவற்றைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.
36
பின்பு, அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல் காத்தார்கள்.
37
அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக இப்படி எழுதி வைத்தார்கள்: இவர் இயேசு, யூதரின் அரசன்.
38
அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்வர்களும் அவருடனே சிலுவைகளில் அறையப்பட்டிருந்தனர்.
39
அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, அவரைப் பழித்துரைத்து,
40
“ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே! உன்னை நீயே விடுவித்துக்கொள். நீ இறைவனின் மகனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்றார்கள்.
41
அவ்விதமாகவே தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், மூப்பர்களும், அவரை ஏளனம் செய்து,
42
“இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையே இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இஸ்ரயேலின் அரசனான இவன், இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம்.
43
இவன், ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனில் நம்பிக்கையாயிருக்கிறான். இறைவன் இவன்மேல் பிரியமாயிருந்தால், இப்போது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள்.
44
அவ்விதமாகவே, அவருடனேகூட சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள்.
45
நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் சூழ்ந்து கொண்டது.
46
பிற்பகல் மூன்று மணியளவில், இயேசு பலத்த குரலில், “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கதறினார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதே அதன் அர்த்தமாகும்.
47
அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
48
உடனே அவர்களில் ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை ரசத்தில் தோய்த்து, அதை ஒரு தடியில் கட்டி, இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49
மற்றவர்களோ, “அவனை விட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகின்றானா பார்ப்போம்” என்றார்கள்.
50
இயேசு திரும்பவும் பலத்த சத்தத்தோடு அழைத்து, தமது இறுதி மூச்சை விட்டார்.
51
அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன;
52
கல்லறைகளும் நொருங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்த மக்களின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.
53
அவர்கள் கல்லறைகளைவிட்டு வெளியே வந்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெற்ற பின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்கு தென்பட்டார்கள்.
54
இயேசுவைக் காவல் காத்துக் கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதியும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு பயமடைந்தார்கள். “நிச்சயமாக இவர் இறைவனின் மகனே!” என்று வியப்புடன் சொன்னார்கள்.
55
இயேசுவின் தேவைகளைக் கவனிப்பதற்கு, கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்த பல பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
56
அவர்களுள் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்களின் தாயும் இருந்தார்கள்.
57
மாலை வேளையானபோது, இயேசுவுக்கு சீடனாயிருந்த அரிமத்தியா பட்டணத்தை சேர்ந்த யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன்,
58
பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான்.
59
யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான விலையுயர்ந்த மெல்லிய துணியில் சுற்றி,
60
அவன் கற்பாறையில் குடைந்து வைத்திருந்த அவனுக்கு சொந்தமான புதிய கல்லறையில் வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுச் சென்றான்.
61
அந்நேரம் மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.
62
மறுநாள் பஸ்கா பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை மதகுருக்களும், பரிசேயர்களும் பிலாத்துவினிடத்திற்குப் போய்,
63
அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்கு பின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
64
ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள் வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஒருவேளை அவனது சீடர்கள் வந்து, அந்த உடலைக் களவாடிச் சென்றுவிட்டு, ‘இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்துவிட்டான்’ என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்திய ஏமாற்று வேலையைவிட பிந்தியது மோசமானதாயிருக்கும்” என்றார்கள்.
65
அதற்குப் பிலாத்து அவர்களிடம், “காவல் வீரர்களைக் அழைத்துக்கொண்டு போய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான்.
66
எனவே அவர்கள் போய், கல்லறையை மூடியிருந்த வாசற் கல்லின் மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள்.
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 28 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28