bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Matthew 25
Matthew 25
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 26 →
1
“அந்நாளிலே, பரலோக அரசானது பத்து கன்னிப்பெண்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு, மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும்.
2
அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களாகவும், ஐந்து பேர் ஞானமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
3
அந்த புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெயையோ எடுத்துச் செல்லவில்லை.
4
ஞானமுள்ளவர்களோ, தங்கள் விளக்குகளுடன் குப்பிகளில் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள்.
5
மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
6
“நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகின்றார்! அவரைச் சந்திக்க புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
7
“அப்போது எல்லா கன்னிப்பெண்களும் விழித்தெழுந்து, அவர்களுடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.
8
புத்தியில்லாதவர்களோ ஞானமுள்ளவர்களிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
9
“அதற்கு ஞானமுள்ளவர்கள், ‘இல்லை, அது எங்களுக்கும் உங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.
10
“அவர்கள் எண்ணெய் வாங்குவதற்காக போய்க் கொண்டிருக்கையில், மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிப்பெண்கள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே போனார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
11
“பின்பு மற்றக் கன்னிப்பெண்களும் வந்து, ‘ஆண்டவனே, ஆண்டவனே, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
12
“ஆனால் அவரோ, ‘உண்மையாகவே சொல்கின்றேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
13
“எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அந்த நாளையும், அந்த நேரத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றார்.
14
“மேலும், பரலோக அரசு, பயணம் போகின்ற ஒருவன், தனது வேலையாட்களை அழைத்து, தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்தது போல் இருக்கும்.
15
அவன், ஒருவனுக்கு ஐந்து தாலந்து பணம், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்து பணம், வேறொருவனுக்கு ஒரு தாலந்து பணம் என பெருந் தொகைப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான்.
16
ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், உடனே போய் அதை முதலீடு செய்து, இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்தான்.
17
அவ்வாறே இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்தான்.
18
ஆனால் ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனோ புறப்பட்டுப் போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.
19
“நீண்ட காலத்தின் பின் அந்த வேலையாட்களின் எஜமான் திரும்பி வந்து, கணக்கு கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டான்.
20
ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் ஐந்து தாலந்து பணத்தைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
21
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேகமானவைகளுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
22
“இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றுக்கொண்டவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
23
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
24
“பின்பு ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமான மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும், அவ்விடத்தில் அறுவடை செய்கின்றவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும், அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன்.
25
எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய், உமது ஒரு தாலந்து பணத்தை நிலத்திலே புதைத்து வைத்தேன். இதோ, உமக்குரிய பணம்’ என்றான்.
26
“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாதவனே! சோம்பேறியான வேலைக்காரனே! நான் ஒரு இடத்தில் விதைக்காமல், அங்கு அறுவடை செய்கின்றவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல், அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே.
27
அப்படியானால், நீ என் பணத்தை வங்கியில் வைப்பீடு செய்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வந்ததும், அதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
28
“அவன், ‘அந்த ஒரு தாலந்து பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து தாலந்து பணம் வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள்.
29
ஏனெனில் உள்ளவனாய் இருக்கின்ற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். அவன் நிறைவாய் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடத்திலிருந்தோ அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30
அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும்’ என்றான்.
31
“மனுமகன் தமது மகிமையில், இறைதூதர்கள் எல்லோருடனும் வரும்போது அவர் தமது மகிமையின் அரியணையில் அமருவார்.
32
சகல இன மக்களும் அவருக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது போல், அவர் மக்களையும் இரண்டு குழுக்களாக வேறு பிரிப்பார்.
33
செம்மறியாடுகளை அவர் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.
34
“அப்போது அரசர் வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை உரித்தாக்கிக்கொள்ளுங்கள்.
35
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், எனக்கு அருந்தக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்;
36
நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்போது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
37
“அப்போது நீதிமான்கள் அவரிடம், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்?
38
எப்போது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடையில்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்?
39
எப்போது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.
40
“அதற்கு அரசர், ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளித்தார்.
41
“பின்பு அவர் தமது இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்.
42
ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்கு அருந்தக் கொடுக்கவில்லை;
43
நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை’ என்று சொல்வார்.
44
“அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவோ தாகமுள்ளவராகவோ அல்லது அந்நியராகவோ உடையில்லாதவராகவோ அல்லது வியாதியுள்ளவராகவோ சிறையிலிருப்பவராகவோ கண்டோம்? எப்போது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
45
“அதற்கு அவர், ‘நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யாமல் விட்டீர்கள்’ என்பார்.
46
“அப்போது, அவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும் நீதிமான்களோ, நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்” என்றார்.
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28