bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Revelation 12
Revelation 12
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 13 →
1
பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது. சூரியனை ஆடையாக அணிந்திருந்த ஒரு பெண் காணப்பட்டாள். அவளது பாதங்களின் கீழே நிலா இருந்தது. அவளது தலையின்மேல், பன்னிரண்டு நட்சத்திரங்களைக்கொண்ட ஒரு கிரீடம் இருந்தது.
2
அவள் கர்ப்பிணியாக இருந்தாள். குழந்தை பெறப் போகும் பிரசவ வலியில் இருந்தபடியினால், அவள் வேதனையில் கதறினாள்.
3
அப்போது பரலோகத்திலே இன்னொரு அடையாளம் தோன்றியது. சிவப்பு நிறமுடைய மிகப் பெரிய இராட்சதப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் ஏழு தலைகளின் மீதும் ஏழு கிரீடங்கள் இருந்தன.
4
அதனுடைய வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை வாரி எடுத்து, அவைகளை பூமியின் மேல் வீசியெறிந்தது. பிரசவிக்கும் தறுவாயிலிருந்த அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற உடனே, அந்தக் குழந்தையை விழுங்குவதற்காக அந்த இராட்சதப் பாம்பு அவள் முன்னால் நின்றது.
5
“எல்லா மக்கள் இனங்களையும் இரும்புக் கோலால் ஆளுகை செய்யும்” ஒரு ஆண் பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளை மேலே இறைவனிடத்திற்கும், அவருடைய அரியணைக்கும் இழுத்துக்கொள்ளப்பட்டது.
6
அந்தப் பெண்ணோ பாலைநிலத்திற்குத் தப்பி ஓடினாள். அங்கு இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்தில் 1,260 நாட்கள் பராமரிக்கப்பட்டாள்.
7
பரலோகத்தில் யுத்தம் தொடங்கியது. மிகாவேலும், அவனுடைய தூதர்களும் அந்த இராட்சதப் பாம்புக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். அந்த இராட்சதப் பாம்பும் அதன் தூதர்களும் எதிர்த்து யுத்தம் செய்த போதிலும்,
8
அவை வெற்றி பெறவில்லை. அதனால் பரலோகத்தில் தமது இடத்தை அவை இழந்து போயின.
9
அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே முழு உலகத்தையும் ஏமாற்றுகிற பழங்காலத்துப் பாம்பு. பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட இவனும், இவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.
10
அப்போது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு ஒலிப்பதை நான் கேட்டேன்: “இப்போது, நமது இறைவனுடைய இரட்சிப்பும், வல்லமையும், அரசும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டன. ஏனெனில் இறைவனுக்கு முன்பாக, இரவும் பகலும் நம்முடைய சகோதரர்களை குற்றம் சாட்டுகின்றவன், கீழே வீசித் தள்ளப்பட்டுவிட்டான்.
11
அவர்களோ ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலும், தங்களுடைய சாட்சியின் வார்த்தையினாலும் அவனை வெற்றிகொண்டார்கள். அவர்கள் தங்களுடைய உயிர் மீது ஆசை வைக்கவில்லை. அதனால் மரணத்துக்கும் அஞ்சவில்லை.
12
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் குடியிருக்கின்றவர்களே! நீங்கள் மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமிக்கும் கடலுக்கும் ஐயோ பேரழிவு, ஏனெனில் பிசாசு கீழே உங்களிடம் வந்திருக்கிறான்! அவன் தன்னுடைய நாட்கள் கொஞ்சம் என்பதை அறிந்து, கடுங்கோபம் கொண்டிருக்கிறான்.”
13
தான் கீழே தள்ளப்பட்டு பூமியில் வீழ்ந்ததைக் கண்ட இராட்சதப் பாம்பு, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச் சென்றது.
14
பாலைநிலத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்குப் பறந்து போகக் கூடியதாக, அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய இராஜாளி பருந்தின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவள் அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல், அங்கே ஒரு காலமும் காலங்களும் அரைக் காலமும் பராமரிக்கப்படுவாள்.
15
அப்போது அந்த இராட்சதப் பாம்பு வெள்ளப் பெருக்கால் அந்தப் பெண்ணை வாரிக் கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து ஆறு போன்று தண்ணீரை அவளுக்குப் பின்னால் கக்கி விட்டது.
16
ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது.
17
அப்போது அந்த இராட்சதப் பாம்பு அந்தப் பெண்ணின் மேல் கடுங்கோபம்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்,
18
இயேசுவினுடைய சாட்சியைக் காத்துக்கொள்கின்ற அவளுடைய சந்ததியில் எஞ்சியிருக்கிற மற்றவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யப் போனது.
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22