bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Revelation 21
Revelation 21
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 22 →
1
பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும், ஒரு புதிய பூமியையும்” கண்டேன். ஏனெனில் முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இல்லாமல் போனது.
2
அப்போது, புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளைப் போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
3
அப்போது அரியணையில் இருந்து ஒரு உரத்த குரல்: “இறைவன் தங்குகின்ற இடம் இப்போது மனிதருடன் இருக்கின்றது. அவர்களோடு அவர் குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து அவர்களுடைய இறைவனாயிருப்பார்.
4
‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது.’ புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், முன்பு இருந்த முறைமைகள் இல்லாமல் போயின” என்று சொல்வதைக் கேட்டேன்.
5
அரியணையில் அமர்ந்திருந்தவர், “இதோ நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்று சொன்னார். மேலும் அவர், “இதை எழுதி வை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன” என்றார்.
6
பின்பு, அவர் என்னிடம் சொன்னதாவது: “அது செய்து முடிந்தாயிற்று! நானே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன். தாகமாய் இருக்கின்றவனுக்கு வாழ்வு தரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாக அருந்தக் கொடுப்பேன்.
7
வெற்றி பெறுகின்றவர்கள் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள்.
8
ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர்கள், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்கள், மந்திரவித்தைகளில் ஈடுபடுகின்றவர்கள், சிலைகளை வணங்குகின்றவர்கள், சகல பொய்யர்கள் ஆகிய இவர்கள் அனைவருக்கும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியே உரிய பங்காக அமையும். இதுவே இரண்டாவது மரணம்.”
9
அப்போது, கடைசி ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு இறைதூதர்களில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப் போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான்.
10
அப்போது, ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் என்னை ஒரு பெரிய உயர்ந்த மலைக்கு அந்த இறைதூதன் கொண்டு சென்றான். அவன் எனக்கு பரிசுத்த நகரமாகிய எருசலேம், இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே வந்துகொண்டிருந்ததைக் காண்பித்தான்.
11
அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. விலையுயர்ந்த மாணிக்கக் கல்லின் பிரகாசத்தைப் போலவும், படிகைக் கல்லைப் போலவும், பளிங்குக் கல்லைப் போலவும் அது மின்னியது.
12
அந்த நகரத்திற்கு உயர்ந்த பெரிய மதிலும், பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. அந்த வாசல்களில் பன்னிரண்டு இறைதூதர்கள் நின்றார்கள். அந்த வாசல்களில் இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
13
அதன் மூன்று வாசல்கள் கிழக்கிலும், மூன்று வாசல்கள் வடக்கிலும், மூன்று வாசல்கள் தெற்கிலும், மூன்று வாசல்கள் மேற்கிலுமாக அமைந்திருந்தன.
14
அந்த நகரத்தின் மதிலானது பன்னிரண்டு அத்திவாரங்களின் மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின் மீது ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
15
என்னுடன் பேசிய இறைதூதன், அந்த நகரத்தையும் அதன் வாசல்களையும் அதன் மதில்களையும் அளப்பதற்கு தங்கத்தினாலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான்.
16
அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவாயிருந்தன. அவன் அந்த கோலினால் நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோ மீட்டர் நீளமாய் இருந்தது, அவ்வாறே அதன் அகலமும் உயரமும் அதே அளவுடையதாக இருந்தன.
17
அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். மனிதர் பயன்படுத்தும் அளவீட்டின்படி அது சுமார் 65 மீட்டர் அளவுடையதாக இருந்தது. அதுவே இறைதூதனின் அளவீடாகவும் இருந்தது.
18
அந்த மதில் படிகைக் கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் கண்ணாடி போன்ற தூய்மையான தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
19
அந்த நகரத்து மதில்களின் அத்திவாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதலாவது அத்திவாரம் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல்,
20
ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரண்டாவது சுகந்திக்கல் என்பதாக இருந்தன.
21
அதன் பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் தனியொரு முத்தைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவான கண்ணாடியைப் போன்ற சுத்தத் தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
22
அந்த நகரத்தில், நான் ஆலயத்தைக் காணவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அந்த நகரத்தின் ஆலயம்.
23
அந்த நகரத்தில் ஒளி கொடுக்க சூரியனோ சந்திரனோ அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளி கொடுக்கின்றது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்கு.
24
மக்கள் இனங்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் அரசர்கள் தங்கள் மகிமையை நகரத்தினுள் கொண்டுசெல்வார்கள்.
25
அந்த நகரத்தின் வாசல்கள் ஒருநாளும் மூடப்படுவதில்லை. ஏனெனில் அங்கே இரவு இல்லை.
26
உலக மக்களின் மகிமையும் புகழ்ச்சியும் அதற்குள் கொண்டு செல்லப்படும்.
27
அசுத்தமான எதுவும் அதற்குள் ஒருபோதும் நுழையாது. வெட்கக்கேடானவற்றைச் செய்கின்றவனோ ஏமாற்றுகின்றவனோ அதற்குள் செல்ல மாட்டான். ஆனால், ஆட்டுக்குட்டியானவருடைய வாழ்வின் புத்தகத்தில் தங்களின் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் மட்டுமே அதற்குள் செல்வார்கள்.
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22