bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Revelation 15
Revelation 15
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 16 →
1
நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு இறைதூதர்கள் ஏழு வாதைகளைத் தயார்படுத்தியவர்களாக நின்றார்கள். இவையே கடைசி வாதைகள். ஏனெனில் இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும்.
2
நெருப்பு கலந்திருந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதன் உருவத்தையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் வெற்றிகொண்டவர்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட வீணைகளை வைத்திருந்தார்கள்.
3
அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்: “எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே! உமது செயல்கள் பெரிதானவை. அவை வியக்கத்தகுந்தவை. மக்கள் இனங்கள் அனைத்துக்கும் அரசராய் இருக்கின்றவரே! உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை.
4
கர்த்தாவே! யார் உமக்குப் பயப்படாதிருப்பார்கள்? யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடாதிருப்பார்கள்? ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா மக்கள் இனத்தவரும் வந்து உமக்கு முன்பாக ஆராதனை செய்வார்கள். ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”
5
இதற்குப் பின்பு நான் பார்த்தபோது பரலோகத்திலுள்ள ஆலயமாகிய சாட்சிக் கூடாரம் திறக்கப்பட்டது.
6
அந்த ஆலயத்திலிருந்து ஏழு இறைதூதர்கள் ஏழு வாதைகளைத் தங்களுடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்கள் சுத்தமான, பிரகாசமுள்ள மென்பட்டு உடையை அணிந்திருந்தவர்களாய், தங்கள் மார்பைச் சுற்றி தங்கச் சால்வைகளைக் கட்டியிருந்தார்கள்.
7
அப்போது, அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, என்றென்றும் வாழ்கின்ற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்த ஏழு தங்கக் கிண்ணங்களை அந்த ஏழு இறைதூதர்களுக்குக் கொடுத்தது.
8
இறைவனுடைய மகிமையிலிருந்தும், அவருடைய வல்லமையிலிருந்தும் எழுந்த புகையினால் அந்த ஆலயம் நிறைந்திருந்தது. அந்த ஏழு இறைதூதர்களுடைய ஏழு வாதைகள் நிறைவேறும் வரை ஒருவராலும் அந்த ஆலயத்திற்குள் உட்பிரவேசிக்க முடியவில்லை.
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22