bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Acts 12
Acts 12
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 13 →
1
அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணி சிலரைக் கைது செய்தான்.
2
அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளினால் வெட்டிக் கொலை செய்தான்.
3
அது யூதர்களை மகிழ்வித்தது என்று ஏரோது கண்டபோது, பேதுருவையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தான். இது புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகை நாட்களிலே நடந்தது.
4
ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் அடைத்து நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவனை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு இராணுவ வீரர்கள் இருந்தார்கள். பேதுருவைப் பஸ்கா பண்டிகையின் பின் வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு ஏரோது எண்ணியிருந்தான்.
5
எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டிருந்தான், ஆனால் திருச்சபையாரோ அவனுக்காக இறைவனிடம் தீவிரமாக மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.
6
ஏரோது, பேதுருவை விசாரணைக்குக் கொண்டுவர இருந்த நாளுக்கு முந்திய இரவிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், இரண்டு இராணுவ வீரர்களுக்கு நடுவில் நித்திரை செய்து கொண்டிருந்தான். வாசல் காவலரும் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.
7
திடீரென, கர்த்தருடைய தூதன் ஒருவன் அங்கே தோன்றினான். அந்தக் காவல் அறையிலே ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பி, “விரைவாய் எழுந்திரு!” என்றான். உடனே பேதுருவின் கைகளைப் பிணைத்திருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன.
8
அப்போது தூதன் அவனிடம், “உனது ஆடைகளை அணிந்து, காலணிகளையும் போட்டுக்கொள்” என்றான். பேதுருவும் அப்படியே செய்தான். மேலும் தூதன் அவனிடம், “நீ உனது மேலாடையைப் போர்த்திக்கொண்டு, என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
9
பேதுரு சிறையைவிட்டு அவனைப் பின்தொடர்ந்தான். ஆனால் அந்தத் தூதன் செய்வதெல்லாம் உண்மையாகவே நடக்கின்றன என்று அவன் அறியாதிருந்தான். அவனோ, தான் ஒரு தரிசனம் காண்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தான்.
10
அவர்கள் முதலாம் காவலர் நிலையத்தையும் இரண்டாம் காவலர் நிலையத்தையும் கடந்து பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவு வரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதற்கூடாகக் கடந்து வெளியே போனார்கள். அவர்கள் ஒரு வீதியின் ஊடாக நடந்து சென்றபோது திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுச் சென்றான்.
11
அப்போது பேதுரு சுயநினைவடைந்து, “கர்த்தர் தமது தூதனை அனுப்பி ஏரோதுவின் பிடியிலிருந்தும், யூதர்கள் செய்ய நினைத்துக் கொண்டிருந்த எல்லாக் காரியங்களிலிருந்தும் என்னை விடுவித்திருக்கிறார் என்பதை இப்போது சந்தேகமின்றி அறிந்துகொண்டேன்” என்றான்.
12
அவன் இதை உணர்ந்தவுடனே மாற்கு என அழைக்கப்பட்ட யோவான் என்பவனின் தாயாகிய மரியாளின் வீட்டிற்குச் சென்றான். அங்கே, அநேக மக்கள் ஒன்றுகூடி மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.
13
பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டியபோது அது யாரெனப் பார்ப்பதற்காக ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண் கதவருகே வந்தாள்.
14
அது பேதுருவின் குரல் என அவள் அறிந்ததும் மிகவும் மனமகிழ்ச்சியடைந்து, கதவையும் திறக்காமலே திரும்பி ஓடிப் போய், “பேதுரு வாசலருகே நிற்கிறார்!” என்று மற்றவர்களுக்கு பரபரப்புடன் சொன்னாள்.
15
அதற்கு அவர்கள் அவளிடம், “உனக்குப் பைத்தியம்” என்றார்கள். ஆனால் அவளோ தொடர்ந்து வாசலில் நிற்பது பேதுருவே என்று சொன்னபோது, “அப்படியானால், இது அவருடைய தூதனாயிருக்கும்” என்றார்கள்.
16
ஆனால் பேதுருவோ தொடர்ந்து தட்டிக் கொண்டே நின்றான். அவர்கள் கதவைத் திறந்து அவனைக் கண்டபோது வியப்படைந்தார்கள்.
17
அவர்களை அமைதியாய் இருக்கும்படி பேதுரு தன் கையினால் சைகை காட்டி, கர்த்தர் தன்னை எவ்விதமாய் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதை விபரமாய்ச் சொன்னான். பின்பு அவன், “இதை யாக்கோபுக்கும், மற்றச் சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்று சொல்லி, வேறொரு இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.
18
மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று இராணுவ வீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று.
19
ஏரோது அவனை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்காததனால், காவலரை குறுக்குவிசாரணை செய்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்தான். அப்போது ஏரோது, யூதேயாவிலிருந்து செசரியாவுக்குப் போய் அங்கே சில காலம் தங்கியிருந்தான்.
20
தீரு மற்றும் சீதோன் மக்கள் மேல் அவன் கடும் கோபமாக இருந்தான். அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, அவனைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அரசனின் அந்தரங்க பணியாளனான பிலாஸ்து என்பவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அரசனோடு சமாதானம் செய்ய விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தமது உணவு விநியோகத்துக்காக ஏரோது அரசனின் நாட்டையே பெரிதும் சார்ந்திருந்தார்கள்.
21
குறித்த நாளிலே ஏரோது அரசருக்குரிய உடைகளை அணிந்து, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு பகிரங்க உரை ஒன்றை நிகழ்த்தினான்.
22
அப்போது அவர்கள், “இது ஒரு மனிதனின் குரல் அல்ல, தெய்வத்தின் குரல்” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.
23
உடனே கர்த்தருடைய தூதனொருவன் அவனை அடித்து வீழ்த்தினான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுக்களால் அரிக்கப்பட்டு மரணித்தான்.
24
ஆனால், இறைவனுடைய வார்த்தையோ தொடர்ந்தும் பெருகிப் பரவியது.
25
பர்னபாவும் சவுலும் தங்களுடைய பணியை முடித்து, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் அழைத்துக்கொண்டு எருசலேமிலிருந்து திரும்பிப் போனார்கள்.
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28