bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Acts 26
Acts 26
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 27 →
1
அப்போது அகிரிப்பா பவுலிடம், “உன் சார்பாக உரையாற்ற உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையை உயர்த்திச் சைகை காட்டி தனது சார்பான வாதத்தை முன்வைத்தான்:
2
“அகிரிப்பா அரசே, யூதர்கள் என்மேல் சுமத்திய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்குமான எனது எதிர் வாதத்தினைக் கேட்பதற்கு மிகப் பொருத்தமானவராகிய உம்மிடம், இதை இன்று சமர்ப்பிக்கக் கிடைத்தது எனது பாக்கியமே.
3
ஏனெனில், யூதருடைய எல்லா சம்பிரதாயங்களையும் அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர். எனவே, நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்.
4
“எனது இளமைப் பருவத்திலிருந்து என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதர்களும் அறிவார்கள்.
5
நீண்ட காலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விரும்பினால் நான் எங்கள் சமயத்திலுள்ள ஒரு கண்டிப்பான பிரிவின்படி, எப்படி ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை அவர்களே சாட்சியாகச் சொல்லலாம்.
6
ஆனால் இப்பொழுதோ, எங்கள் முற்பிதாக்களுக்கு இறைவன் வாக்குறுதி பண்ணியதில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இங்கே விசாரணை செய்யப்படுகிறேன்.
7
இந்த வாக்குறுதி நிறைவேறுவதைக் காணும் எதிர்பார்ப்புடனேயே எங்கள் பன்னிரண்டு கோத்திரத்தினரும் இரவும் பகலுமாய் இறைவனுக்கு ஆர்வத்துடன் பணி செய்கின்றார்கள். அரசே! அந்த நம்பிக்கையின் காரணமாகவே யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.
8
இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவதை நம்பமுடியாது என நீங்கள் எண்ணுவது ஏன்?
9
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நானும் முன்பு எண்ணியிருந்தேன்.
10
அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை மதகுருக்களின் அதிகாரத்தைப் பெற்று பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன். அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக நானும் என் அங்கீகாரத்தை வழங்கியிருந்தேன்.
11
ஒவ்வொரு ஜெபஆலயத்திற்கும் போய், அவர்களைப் பல முறை தண்டனைக்கு உட்படுத்தி, இறைவனை நிந்தித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். அவர்களுக்கு எதிராக நான் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வேறு நகரங்களுக்கும் சென்றேன்.
12
“இப்படியாக ஒருமுறை நான் தலைமை மதகுருக்களின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.
13
அரசே, நான் போகும் வழியில், நண்பகல் வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளி பிரகாசிக்கக் கண்டேன். அது சூரியனை விடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது.
14
நாங்கள் எல்லோரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரேய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்’ என்றது.
15
“அப்போது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, ‘நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.
16
இப்போது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் குறித்து நீ கண்டவற்றுக்கும் நான் உனக்குக் காண்பிக்கப் போகின்றவற்றுக்கும் சாட்சியாய் இருக்க வேண்டும்.
17
நான் உன்னை உன்னுடைய சொந்த மக்களிடமும், யூதரல்லாதவர்களிடமும் அனுப்புகிறேன். அவர்களிடமிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
18
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும், யூதரல்லாத மக்களும் திரும்பும்படி, நீ அவர்களது கண்களைத் திறக்கச் செய்யவே நான் உன்னை அனுப்புகிறேன். ஆகவே அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று என்மேல் வைத்த விசுவாசத்தினால், பரிசுத்தமாக்கப்பட்ட மக்களுடன் அவர்களும் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’ என்றார்.
19
“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.
20
எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும் பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவிலும் இருந்தவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்ப வேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவித்தேன்.
21
இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலை செய்ய முயற்சித்தார்கள்.
22
ஆயினும், இன்றுவரை நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி அளித்துக்கொண்டு இருக்கின்றேன். இறைவாக்கினரும் மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கின்றேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை.
23
மேசியா வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய் தமது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்.”
24
இப்படியாக பவுல் தனது சார்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது பெஸ்து குறுக்கிட்டு, “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! உனது அதிக படிப்பினால் உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான்.
25
அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே! எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும் நியாயமுமானது.
26
அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் வெளிப்படையாகப் பேசுகின்றேன். நான் சொன்ன இவை எதுவுமே அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல.
27
அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்றான்.
28
அப்போது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே நீ என்னைக் கிறிஸ்தவனாக மாற்றிவிட நினைக்கிறாயா?” என்றான்.
29
அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும் என்னைப் போல் ஆக வேண்டும். ஆனால் அவர்களும் இவ்விதம் சங்கிலிகளால் கட்டப்படக் கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.
30
அரசன் எழுந்திருக்க, அவனுடனே ஆளுநரும் பெர்னிக்கேயாளும் அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களும் எழுந்தார்கள்.
31
அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில், “இவன் மரணதண்டனையையோ, சிறைத்தண்டனையையோ பெறுவதற்குத் தகுதியான எதையும் செய்யவில்லை” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
32
அப்போது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேன்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28