bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Acts 5
Acts 5
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 6 →
1
அப்போது, அனனியா என்னும் பெயருடைய ஒரு மனிதன் தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து ஒரு சிறு நிலத்தை விற்றான்.
2
விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவியும் அறியத்தக்கதாக தனக்கென ஒளித்து வைத்துக்கொண்டு, மிகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பது போல அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.
3
அப்போது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென ஒளித்து வைத்துக்கொண்டாயே.
4
அது விற்கப்படும் முன்பு, அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும் அந்தப் பணம் உன்னிடம் தானே இருந்தது. இப்படிப்பட்ட ஒரு செயலை திட்டமிட்டுச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான்.
5
அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்து போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று.
6
அப்போது இளைஞர்கள் முன்வந்து அவனது உடலைத் துணியில் சுற்றி, சுமந்துகொண்டு சென்று அடக்கம் செய்தார்கள்.
7
ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பின், நடந்தது என்ன என்பதை அறியாமல் அவனுடைய மனைவி உள்ளே வந்தாள்.
8
பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று, நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள்.
9
அப்போது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு நீயும் உடன்பட்டதெப்படி? பார்! உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு செல்வார்கள்” என்றான்.
10
அந்த வினாடியே, அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து இறந்து போனாள். அப்போது அந்த இளைஞர்கள் உள்ளே வந்து, அவள் இறந்து கிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே சுமந்துகொண்டு சென்று அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள்.
11
திருச்சபையோருக்கும், இந்த விடயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது.
12
அப்போஸ்தலர்கள் அநேக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் மக்களிடையே செய்தார்கள். விசுவாசிகள் எல்லோரும் சாலொமோனுடைய மண்டபத்தில் கூட்டம் கூடுவது வழக்கமாயிருந்தது.
13
மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு எவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை.
14
ஆயினும், அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து அவர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை பெருகிற்று.
15
அதன் பலனாக, மக்கள் தங்களுள் நோயுற்றிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள் மேலும் பாய்கள் மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்து போகையில், அவனுடைய நிழலாவது படும்படியே இப்படிச் செய்தார்கள்.
16
எருசலேமைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தங்களில் நோயுற்றிருந்தவர்களையும், தீய ஆவியினால் துன்புறுத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லோரும் குணமடைந்தார்கள்.
17
அப்போது தலைமை மதகுருவும், சதுசேயர் பிரிவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்தார்கள்.
18
அவர்கள் அப்போஸ்தலர்களைக் கைது செய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
19
ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே கொண்டுவந்தான்.
20
அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்தப் புது வாழ்வின் செய்தி அனைத்தையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான்.
21
அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, அதிகாலையிலே ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள். தலைமை மதகுருவும், அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது அவர்கள் நியாயசபையை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா சமூகத் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி ஆள் அனுப்பினார்கள்.
22
ஆனால் ஆலயக் காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து அதை அறிவித்தார்கள்.
23
திரும்பி வந்தவர்கள் அவர்களிடம், “சிறைச்சாலை பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதையும், சிறைக்காவலர் வாசல்களில் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். ஆனால் சிறைச்சாலைக் கதவுகளை திறந்தபோது, உள்ளே ஒருவரையும் நாங்கள் காணவில்லை” என்றார்கள்.
24
ஆலயக் காவலர் தலைவனும், தலைமை மதகுருக்களும் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, இதனால் என்ன நடக்கப் போகின்றதோ என யோசித்து மனக் குழப்பமடைந்தார்கள்.
25
அப்போது ஒருவன் வந்து, “பாருங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் ஆலய முற்றத்தில் நின்று மக்களுக்குப் போதிக்கிறார்கள்” என்று அறிவித்தான்.
26
அப்போது, ஆலயக் காவலர் தலைவன் ஆலயக் காவலருடன் போய் அப்போஸ்தலர்களைப் பிடித்து வந்தான். ஆயினும், அவர்கள்மீது வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள் மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள்.
27
அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, நியாயசபையின் முன்பாக நிறுத்தினார்கள். தலைமை மதகுரு அவர்களிடம் கேள்விகளைக் கேட்டான்.
28
அவன், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆயினும் நீங்கள் உங்கள் போதனையினாலே, எருசலேமை நிரப்பி விட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப் பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதி கொண்டிருக்கிறீர்கள்” என்றான்.
29
ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அவர்களிடம், “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்!
30
நீங்கள் சிலுவை மரத்தில் தொங்கவிட்டுக் கொலை செய்த இயேசுவை, நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் எழுந்திருக்கச் செய்தார்.
31
இறைவனோ அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுபுறத்தில் இருக்கும்படி மேன்மையளித்து உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும் பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.
32
இவற்றுக்கு நாங்களும், தமக்குக் கீழ்ப்படிகின்றவர்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சி” என்றார்கள்.
33
அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து அப்போஸ்தலர்களைக் கொல்ல விரும்பினார்கள்.
34
ஆனால் அந்த நியாயசபையில் கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு நீதிச்சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான், அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலர்களை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான்.
35
பின்பு அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “இஸ்ரயேல் மனிதரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப் போவதைக் குறித்து கவனமாயிருங்கள்.
36
ஏனெனில் சில காலத்திற்கு முன்பு தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான். ஏறக்குறைய நானூறு மனிதர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய எல்லோரும் சிதறிப் போனார்கள். அந்தக் குழுவினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
37
அவனுக்குப் பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள்.
38
எனவே, இப்போது இந்த விடயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே; இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்களைப் போக விடுங்கள்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயற்பாடும் மனிதரிடமிருந்து வந்ததானால் அது இல்லாமற் போகும்.
39
ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்த முடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கின்றவர்களாய் இருப்பீர்களே” என்றான்.
40
அங்கிருந்தவர்கள் அவன் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்போது அவர்கள் அப்போஸ்தலர்களை உள்ளே வரச் செய்து, சவுக்கினால் அடித்து, இயேசுவின் பெயரினால் பேசக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்களைப் போகவிட்டார்கள்.
41
அப்போஸ்தலர்கள் நியாயசபையை விட்டுப் போன பின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
42
ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுவீடாகவும் சென்று இடைவிடாது போதித்து, இயேசுவே மேசியா என்ற நற்செய்தியைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28