bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Acts 9
Acts 9
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 10 →
1
இதற்கிடையில், சவுல் தொடர்ந்து ஆண்டவருடைய சீடர்களுக்கு பயமுறுத்தல்களும் கொலை அச்சுறுத்தல்களும் விடுத்து வந்தான். அவன் தலைமை மதகுருவினிடத்திற்குப் போய்,
2
கிறிஸ்துவின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆண் பெண் யாராயிருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு கொடுப்பதற்கென கடிதங்களைப் பெற்றுக்கொண்டான்.
3
அவன் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கிக் கொண்டிருக்கையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது.
4
அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்போது, தன்னுடன் பேசுகின்ற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது.
5
அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ துன்புறுத்துகின்ற இயேசு நானே.
6
எனவே, இப்போது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்ய வேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார்.
7
சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் எவரையுமே காணவில்லை.
8
சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவனுடைய கையைப் பிடித்து தமஸ்கு பட்டணத்திற்குள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள்.
9
அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் உண்ணவோ அருந்தவோ இல்லை.
10
தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். ஆண்டவர் தரிசனத்தில் அவனை அழைத்து, “அனனியா!” என்றார். அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ இருக்கின்றேன்!” என்றான்.
11
அப்போது ஆண்டவர் அவனிடம், “நீ எழுந்து, ‘நேர்’ என்னும் தெருவில் இருக்கின்ற யூதாவின் வீட்டிற்கு போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த, சவுல் என்னும் பெயருடைய மனிதனைப்பற்றி விசாரி. அவன் இப்போது மன்றாடிக் கொண்டிருக்கிறான்.
12
அவன் ஒரு தரிசனத்திலே, அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து தன் மேல் கைகளை வைத்ததனால், தான் பார்வையைத் திரும்பவும் பெற்றுக்கொள்வதாகக் கண்டிருக்கிறான்” என்றார்.
13
அப்போது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
14
உமது பெயரைச் சொல்லி வழிபடுகின்ற எல்லோரையும் கைது செய்வதற்கு, தலைமை மதகுருவினிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான்.
15
ஆனால் ஆண்டவர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும், இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிவு செய்திருக்கின்றேன்.
16
எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று, நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.
17
ஆகவே அனனியா புறப்பட்டு, அந்த வீட்டைச் சென்றடைந்தான். அவன் சவுலின் மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில், வழியிலே உனக்குக் காட்சியளித்த ஆண்டவர் இயேசு, என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ திரும்பவும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான்.
18
உடனேயே சவுலின் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்போது அவனால் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்றான்.
19
பின்பு அவன் சிறிதளவு உணவைச் சாப்பிட்டு, தன் பலத்தைத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். சவுல் தமஸ்குவில் இருந்த சீடர்களுடன் சில நாட்களைக் கழித்தான்.
20
அவன் தாமதமின்றி உடனடியாக, இயேசு இறைவனின் மகன் என்று, யூத ஜெபஆலயங்களில் பிரசங்கிக்கத் தொடங்கினான்.
21
அவன் சொன்னதைக் கேட்ட எல்லோரும் வியப்புற்று, “எருசலேமிலே இயேசுவின் பெயரைச் சொல்லி வழிபடுகின்றவர்களை அழித்தவன் இவனல்லவா? இவன் இவர்களைக் கைது செய்து, தலைமை மதகுருவிடம் கொண்டுபோக அல்லவா இங்கே வந்தான்?” என்று கேட்டார்கள்.
22
ஆயினும் சவுல், மென்மேலும் வல்லமை பெற்று, தமஸ்குவிலே வாழுகிற யூதர்கள் அனைவருக்கும் இயேசுவே மேசியா என்று நிரூபித்து, அவர்களை மனந்தடுமாறச் செய்தான்.
23
இவ்வாறு பல நாட்கள் சென்ற பின்பு, யூதர்கள் ஒன்றுகூடி அவனைக் கொலை செய்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார்கள்.
24
சவுலோ அவர்களுடைய சூழ்ச்சி என்னவென்று அறிந்துகொண்டான். அவர்கள் அவனைக் கொலை செய்வதற்காக இரவும் பகலுமாக அந்த நகரத்தின் வாசல்களைக் கவனமாய் காத்துக் கொண்டிருந்தார்கள்.
25
ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள் இரவிலே அவனை அழைத்துக்கொண்டு போய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதிலின் ஒரு இடைவெளியினூடாக இறக்கிவிட்டார்கள்.
26
அவன் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக் குறித்துப் பயமடைந்திருந்தபடியால், உண்மையாகவே இவன் ஒரு சீடன் என்று நம்பவில்லை.
27
ஆனால் பர்னபா அவனை அழைத்துக்கொண்டு அப்போஸ்தலர்களிடம் வந்து, சவுல் எவ்விதம் தன் பயணத்தில் ஆண்டவரைக் கண்டான் என்பதையும், ஆண்டவர் எவ்விதம் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான்.
28
எனவே சவுல் அவர்களுடன் தங்கி எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்து, ஆண்டவரின் பெயரில் துணிவுடன் பேசினான்.
29
அவன் கிரேக்க மொழி பேசும் யூதருடன் உரையாடி விவாதித்தான். அவர்களோ, அவனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்.
30
சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் அவனை செசரியாவுக்கு அழைத்துக்கொண்டு போய் அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
31
அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையானது சமாதானத்தை அனுபவித்து பலமடைந்தது. திருச்சபையோர் கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட்டு திருச்சபை வளர்ந்து எண்ணிக்கையில் பெருகிற்று.
32
பேதுரு, நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கச் சென்றான்.
33
அங்கே, முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான்.
34
பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான்.
35
லித்தாவிலும், சாரோனிலும் வாழ்ந்த எல்லோரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள்.
36
யோப்பாவிலே இருந்த சீடர்களில் தபீத்தா என்னும் பெயருடைய ஒரு சிஷ்யை இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளை தொர்க்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்போதும் நன்மை செய்கின்றவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கின்றவளாயும் இருந்தாள்.
37
அந்நாட்களில் அவள் சுகவீனமடைந்து இறந்து போனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது.
38
லித்தா, யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கின்றான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது இரண்டு பேரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாருங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள்.
39
பேதுரு அவர்களுடனே புறப்பட்டான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். எல்லா விதவைகளும் அவனைச் சுற்றி நின்று அழுதார்கள். தொர்க்காள் உயிரோடு இருக்கையில், அவள் செய்த மேலாடைகளையும் மற்ற உடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள்.
40
பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாழிட்டு மன்றாடினான். அவன் இறந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா, எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது எழுந்து உட்கார்ந்தாள்.
41
அவன் அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் அழைத்து, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான்.
42
இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்.
43
யோப்பாவிலே தோல் பதனிடுகின்ற சீமோனுடன் பேதுரு பல நாட்கள் தங்கியிருந்தான்.
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28