bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Mark 10
Mark 10
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
1
பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயாவுக்கும் யோர்தானுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். திரும்பவும் மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். வழக்கம் போல் அவர் அவர்களுக்குப் போதித்தார்.
2
சில பரிசேயர்கள் வந்து அவரைச் சோதிக்கும் நோக்கில், “ஒருவன் தனது மனைவியை விவாகரத்துச் செய்வது, நீதிச்சட்டத்தின்படி சரியா?” என்று கேட்டார்கள்.
3
அதற்கு இயேசு, “மோசே உங்களுக்கு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார்.
4
அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி, அவளை விவாகரத்துச் செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.
5
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே மோசே இந்த நீதிச்சட்டத்தை உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்.
6
ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார்.
7
‘இந்தக் காரணத்தினால், ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;
8
அவர்கள் இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இனி இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
9
ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
10
அவர்கள் மறுபடியும் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள்.
11
அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கின்ற ஒருவன் அவளுக்கு விரோதமாக தகாத உறவுகொள்கின்றான்.
12
ஒரு பெண் தனது கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்தால் அவள் தகாத உறவுகொள்கிறாள்” என்றார்.
13
அதன்பின்பு சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக மக்கள் அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ அவர்களைக் கண்டித்தார்கள்.
14
இயேசு இதைக் கண்டபோது கோபமடைந்து அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
15
நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு சிறு பிள்ளையைப் போல இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார்.
16
அத்துடன் அவர் அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு தமது கைகளை அவர்கள்மீது வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
17
இயேசு அங்கிருந்து போய்க் கொண்டிருக்கையில் ஒருவன் அவரிடம் ஓடி வந்து அவருக்கு முன்பாக முழந்தாழிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
18
அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
19
‘கொலை செய்யாதே, தகாத உறவுகொள்ளாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
20
அதற்கு அவன், “போதகரே, இவற்றையெல்லாம் நான் சிறுவனாயிருந்த காலம் முதல் கைக்கொண்டு வருகின்றேன்” என்றான்.
21
இயேசு அவனை நோக்கிப் பார்த்து அவன்மீது அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடம் குறைவுபடுகிறது. நீ போய் உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, உனக்கு பரலோகத்தில் செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
22
அவனிடம் பெருமளவு செல்வம் இருந்தபடியால் அதைக் கேட்டு முகம் வாடியவனாய் துக்கத்துடன் திரும்பிச் சென்றான்.
23
இயேசு சுற்றிப் பார்த்து தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன், இறைவனுடைய அரசுக்குள் செல்வது எவ்வளவு கடினமானது!” என்றார்.
24
அவருடைய வார்த்தைகளைக் குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு திரும்பவும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் செல்வது எவ்வளவு கடினமானது!
25
ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
26
சீடர்களோ இன்னும் அதிக வியப்படைந்தவர்களாய், “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
27
இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார்.
28
அப்போது பேதுரு அவரிடம், “நாங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு உம்மைப் பின்பற்றி வந்தோமே” என்றான்.
29
அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,
30
அவன் இந்த வாழ்வில் வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்மார்களையும், வயல்களையும் நூறு மடங்காகப் பெற்றுக்கொள்வதோடு அவனுக்குத் துன்புறுத்தல்களும் ஏற்படும். அத்தோடு, வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான்.
31
ஆனாலும், கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
32
அவர்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியில் இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தார்; அதைக் கண்ட சீடர்கள் வியப்படைய, அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்தார்கள். மீண்டும் அவர் பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.
33
“இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் தலைமை மதகுருக்களிடமும் நீதிச்சட்ட ஆசிரியர்களிடமும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரணதண்டனை விதித்து யூதரல்லாதவர்களிடம் அவரை ஒப்புக்கொடுப்பார்கள்.
34
அவர்களோ அவரை ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, அவரைச் சாட்டையினால் அடித்து, அவரைக் கொலை செய்வார்கள். ஆனாலும் மூன்று நாட்களின் பின், அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றார்.
35
அப்போது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.
36
அதற்கு அவர், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
37
அதற்கு அவர்கள், “நீர் உமது மகிமைப் பிரகாசத்தில் அமரும்போது எங்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலுமாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்கள்.
38
அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து உங்களால் அருந்த முடியுமா அல்லது எனக்கிருக்கும் ஞானஸ்நானத்தில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
39
அதற்கு அவர்கள், “எங்களாலும் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து நீங்கள் அருந்துவீர்கள், நான் பெற்ற ஞானஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள்.
40
ஆனால் எனது வலது பக்கத்தில் அமருவதையோ இடது பக்கத்தில் அமருவதையோ அனுமதிப்பது என்னுடைய செயலல்ல. இந்த இடங்கள் யாருக்கென ஆயத்தமாக்கப்பட்டு இருக்கின்றனவோ அவர்களுக்கே அவை உரியவை” என்றார்.
41
இதைக் கேட்டபோது மற்ற பத்துப் பேரும், யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் கோபமடைந்தார்கள்.
42
இயேசு அவர்களை ஒன்றாக அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
43
ஆனால் உங்களுள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்க வேண்டும்.
44
முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும்.
45
ஏனென்றால், மனுமகனும்கூட பணிவிடையைப் பெறுவதற்கு அல்ல, மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவும், அநேகரை மீட்கும் பொருட்டாகத் தமது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.
46
அதன்பின் அவர்கள் எரிகோவுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமான மக்களோடு அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் பார்வையற்ற ஒருவன் வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
47
அவன், நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார் என கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான்.
48
பலர் அவனைக் கண்டித்து அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டு அழைத்தான்.
49
இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் பார்வையற்ற அந்த மனிதனை அழைத்து, “தைரியமாய் இரு! எழுந்து நில்! அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
50
அவன் தனது மேலாடையை எறிந்துவிட்டு துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான்.
51
இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு பார்வையற்ற அந்த மனிதன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
52
அப்போது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து அந்த வீதி வழியே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16