bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Mark 11
Mark 11
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
1
அவர்கள் எருசலேமை அண்மித்துச் சென்றடைந்தபோது, ஒலிவமலைக்கு அருகிலுள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்து தமது சீடர்களில் இருவரை அனுப்பி,
2
“உங்களுக்கு முன்னே இருக்கின்ற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகையில் ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.
3
யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவைப்படுகிறது. அவர் விரைவாக இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
4
அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலருகே ஒரு கழுதைக்குட்டி கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது
5
அங்கே நின்று கொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
6
அதற்கு, இயேசு சொன்னபடியே அவர்கள் பதிலளித்தபோது அவர்களைப் போகவிட்டார்கள்.
7
அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் மேலாடைகளை அதன்மீது போட்டபோது அவர் அதன்மீது உட்கார்ந்தார்.
8
அநேகர் தங்களுடைய மேலாடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல் வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.
9
அவருக்கு முன்பாக சென்றவர்களும், பின்தொடர்ந்து சென்றவர்களும் சத்தமிட்டு, “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
10
“வரப் போகின்ற நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என ஆர்ப்பரித்தார்கள்.
11
பின்பு இயேசு எருசலேமுக்குள் சென்று ஆலயத்திற்குப் போனார். அங்கு அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகிவிட்டதால் பன்னிருவருடனும் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார்.
12
மறுநாள் அவர்கள் பெத்தானியாவைவிட்டுப் புறப்படுகையில் இயேசு பசியாயிருந்தார்.
13
அவர் தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்குச் சென்றார். அவர் அதற்கு அருகில் வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல.
14
அப்போது அவர் அந்த மரத்தைப் பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடாமல் இருக்கட்டும்” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டார்கள்.
15
பின்னர் அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது இயேசு ஆலய வளாகத்துக்குள் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். நாணயமாற்று செய்வோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
16
அத்துடன் அவர் ஆலய வளாகத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
17
பின்பு, அவர் அவர்களுக்குப் போதித்து, “ ‘எனது வீடு எல்லா இன மக்களுக்கும் ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்” என்று சொன்னார்.
18
தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது அவரைக் கொலை செய்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனாலும், கூடியிருந்த மக்கள் கூட்டத்தார் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்ததால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள்.
19
மாலை வேளையானபோது இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே போனார்கள்.
20
மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப் போய் இருந்ததைச் சீடர்கள் கண்டார்கள்.
21
பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்தி மரம் பட்டுப்போனது!” என்றான்.
22
அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம்கொள்ளுங்கள்.
23
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி தனது இருதயத்தில் சந்தேகப்படாமல் தான் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.
24
ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்கள் மன்றாடலில் நீங்கள் எதைக் கேட்கின்றீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்போது அது உங்களுடையதாகும்.
25
ஆனால், நீங்கள் நின்று மன்றாடும்போது உங்கள் மனதில் யார் மீதாவது கசப்பேதும் இருக்குமானால் அவரை மன்னியுங்கள்; அப்போது பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.
26
அப்படி நீங்கள் மன்னிக்காதுவிட்டால் உங்கள் பரலோக பிதாவும், உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார்” என்றார்.
27
அவர்கள் திரும்பவும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய வளாகத்தில் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.
28
அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கின்றீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள்.
29
அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். அப்போது எந்த அதிகாரத்தைக்கொண்டு நான் இவற்றைச் செய்கின்றேன் என்று உங்களுக்குச் சொல்வேன்.
30
யோவானின் ஞானஸ்நானம், பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
31
அவர்கள் அதைக் குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக் கொண்டவர்களாய், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மிடம் கேட்பார்.
32
அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்வோமானால், யோவான் ஒரு இறைவாக்கினன் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றபடியால், மக்களுக்குப் பயப்பட வேண்டியிருக்குமே” என்றார்கள்.
33
எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால், எந்த அதிகாரத்தினால் நான் இவற்றைச் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16