bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
/
Mark 9
Mark 9
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 10 →
1
பின்பு இயேசு அவர்களிடம், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன் மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
2
ஆறு நாட்களுக்குப் பின் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தம்முடன் அழைத்துக்கொண்டு, இயேசு ஒரு உயரமான மலைக்குச் சென்றார். அங்கே அவர்கள் மாத்திரமே இருக்கையில், அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறியது.
3
அப்போது, அவருடைய உடைகள் இந்தப் பூமியிலுள்ள எவராலும் வெளுக்க முடியாதளவு மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன.
4
அத்துடன் எலியாவும் மோசேயும் அங்கே அவர்களுக்குத் தென்பட்டு, இயேசுவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
5
உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான்.
6
அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால் அவனுக்குத் தான் சொல்வது என்னவென்றே தெரியவில்லை.
7
அப்போது ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர்தான் என் அன்பு மகன், இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்றது.
8
உடனே அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.
9
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகின்றபோது இயேசு அவர்களிடம் மனுமகன் இறந்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் கண்டதை வேறு எவருக்கும் சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டார்.
10
அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
11
அவர்கள் அவரிடம், “அப்படியானால் முதலாவது எலியா வர வேண்டும் என்று நீதிச்சட்ட ஆசிரியர்கள் சொல்வது ஏன்?” என்று கேட்டார்கள்.
12
அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து எல்லாவற்றையும் முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மனுமகன் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பது ஏன்?
13
நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எலியா வந்துவிட்டான். அவனைக் குறித்து எழுதியிருக்கின்றபடியே அவர்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
14
அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங் கூட்டம் கூடியிருப்பதையும், நீதிச்சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
15
மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்டவுடன் வியப்பு மேலிட்டவர்களாய் ஓடிப் போய் அவருக்கு ஆசி கூறினார்கள்.
16
இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி இவர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
17
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பீடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.
18
அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அது அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக் கடித்துக்கொண்டு, விறைப்படைந்து போகின்றான். அந்த தீய ஆவியைத் துரத்தும்படி நான் உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.
19
அப்போது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருப்பேன்? எவ்வளவு காலம் நான் உங்களைச் சகித்துக் கொண்டிருப்பேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
20
அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்தத் தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனுக்கு வலிப்பு உண்டாக்கியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை தள்ளியது.
21
இயேசு அவனுடைய தகப்பனிடம், “எவ்வளவு காலமாக இவனுக்கு இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இப்படி இருக்கின்றது” என்று சொல்லிவிட்டு,
22
“இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பல முறை தள்ளி வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய முடிந்தால் எங்கள்மேல் இரக்கம் கொண்டு, எங்களுக்கு உதவி செய்யும்” என்றான்.
23
அதற்கு இயேசு, “உங்களால் முடியுமா, என்று கேட்கின்றாயா? விசுவாசிக்கின்றவனுக்கு எல்லாம் சாத்தியமே” என்றார்.
24
உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கின்றேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்” என்றான்.
25
அப்போது மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடி வருவதை இயேசு கண்டபோது, அவர் அந்த தீய ஆவியைப் பார்த்து, “கேட்கவும் பேசவும் முடியாத ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் நுழையாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
26
அந்த தீய ஆவி கூச்சலிட்டு, அவனுக்கு அதிகமாய் வலிப்பு உண்டாக்கி, அவனைவிட்டு வெளியேறியது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” எனச் சொல்லுமளவுக்கு அவன் இறந்தவனைப் போல கிடந்தான்.
27
ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.
28
பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, “ஏன் அதை எங்களால் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
29
அதற்கு அவர், “இவ்வகையான தீய ஆவி மன்றாடலினாலும் உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.
30
அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை எவரும் அறிவதை இயேசு விரும்பவில்லை.
31
ஏனெனில் இயேசு தமது சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு மனிதருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார், அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், மூன்று நாட்களுக்கு பின் அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றும் சொன்னார்.
32
ஆனால் அவர்களோ அவர் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயப்பட்டார்கள்.
33
அவர்கள் கப்பர்நகூமை வந்தடைந்து வீட்டில் இருந்தபோது, “வழியிலே நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.
34
அவர்கள் ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்கள்; ஏனெனில், தங்களில் யார் பெரியவன் என்று வழியிலே அவர்கள் விவாதித்துக்கொண்டு வந்தார்கள்.
35
இயேசு உட்கார்ந்து, பன்னிருவரையும் தம்மிடம் வரும்படி அழைத்து, “யாராவது முதன்மையானவனாக இருக்க விரும்பினால் அவனே எல்லோரிலும் கடைசியானவனாக இருக்க வேண்டும். அவன் எல்லோருக்கும் பணியாளனாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
36
அவர் ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி தமது கைகளால் அணைத்தபடி, அவர்களிடம்:
37
“இப்படிப்பட்ட ஒரு சிறு பிள்ளையை எனது பெயரில் ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றான்” என்றார்.
38
அப்போது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரில் பேய்களைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால் நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
39
இயேசு அவர்களிடம், “அவனைத் தடுக்க வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கின்றவன், விரைவாக என்னைக் குறித்து தீமையாய்ப் பேச மாட்டான்.
40
ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன் நமக்குச் சார்பாகவே இருக்கின்றான்.
41
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால் யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், அவன் நிச்சயமாக தனக்குரிய வெகுமதியைப் பெறாமல் போக மாட்டான்” என்றார்.
42
என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு கடலிலே தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும்.
43
உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கைகளுடன் ஒருபோதும் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது.
44
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை.
45
உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கால்களுடன் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும் கால் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது.
46
நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை.
47
உனது கண் உன்னைப் பாவம் செய்யப் பண்ணினால் அதைத் தோண்டி எடுத்து விடு. நீ இரண்டு கண்களுடன் நரகத்திற்குள் எறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் இறையரசுக்குள் போவது உனக்குச் சிறந்தது.
48
நரகத்தில், அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.
49
உப்பிட்டு பதனிடுவது போல ஒவ்வொருவரும் நெருப்பினால் பதனிடப்படுவார்கள்.
50
“உப்பு நல்லதுதான், ஆனால் அது தனது சாரத்தை இழந்து போனால் திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? நீங்கள் உங்களுக்குள்ளே உப்பின் சாரம் உள்ளவர்களாக இருந்து, ஒருவரோடொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16